For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் பாதுகாப்புக்கு ஆப்படிக்கும் 'வாட்ஸ்ஆப்'புக்கு தடை விதியுங்கள்: சுப்ரீம் கோர்ட்டில் மனு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: வாட்ஸ்ஆப்புக்கு தடை விதிக்கக் கோரி தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

குர்காவ்னை சேர்ந்தவர் சுதிர் யாதவ். தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர். எம்.சி.ஏ. படித்துள்ள அவர் ஒரு ஆப் டெவலப்பர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் நிர்வாகம் சில திருத்தங்கள் மேற்கொண்டது.

Ban whatsapp: PIL filed in superme court

அதாவது மெசேஜ் அனுப்புபவர், மெசேஜை பெறுபவரை தவிர வேறு யாரும் அதை பார்க்க முடியாது என்பது தான். இதனால் நாட்டிற்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்படலாம் என்று சுதிருக்கு தோன்றியது.

இதையடுத்து அவர் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும் வகையில் உள்ள வாட்ஸ்ஆப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னதாக அவர் வாட்ஸ்ஆப் நிர்வாகத்தின் புதிய நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு தகவல் அரியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தும் அவருக்கு பதில் வரவிலல்லை. இதையடுத்து தான் அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

English summary
A RTI activist named Sudhir Yadav filed a PIL in the apex court seeking ban on whatsapp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X