For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 84 லட்சம் சில்லறையாக திருடிய வங்கி மேலாளர்.. கரைப்படியாத கைக்கு சொந்தக்காரர்?.. ஏன் தெரியுமா?!

Google Oneindia Tamil News

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் ரூ. 84 லட்சத்தை சில்லறையாக திருடி அதன் மூலம் லாட்டரி சீட்டுகளாக வாங்கி குவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெமாரி என்ற பகுதியில் உள்ளது பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கியின் மூத்த உதவி மேலாளராக உள்ள தாரக் ஜெய்ஸ்வால்(35). இவர் இந்த வங்கிக்கு மாற்றலாகி வந்து 17 மாதங்கள் ஆகின்றன.

Bank manager steals coins worth Rs 84 lakh to buy lottery tickets in Bengal

இந்த வங்கியில் கடந்த நவம்பர் மாத இறுதியில் ஆடிட்டிங் சோதனை நடந்தது. அப்போது சில்லறை காசுகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரில் அவற்றின் எண்ணிக்கை குறைந்தது. இதை அதிகாரிகள் கவனித்தனர்.

அந்த சமயத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்று தாரக் ஜெய்ஸ்வால் வங்கிக்கு வராமல் விடுப்பில் இருந்துள்ளார். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவர் மீது போலீஸில் புகார் அளித்தனர்.

போலீஸார் தாரக்கை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பணியாற்றிய 17 மாதங்களில் ரூ.84 லட்சத்துக்கான சில்லறையை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடியுள்ளார். ரூபாய் நோட்டுகளை திருடாமல் சில்லறைகளாகவே திருடியுள்ளார்.

இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ஜெய்ஸ்வால் கூறுகையில் லாட்டரி சீட்டுகள் வாங்குவதற்காகவே சில்லறைகளை திருடினேன். எப்போது வேண்டுமானாலும் ஆடிட்டிங் வந்தால் மாட்டிக் கொள்வேன் என்பது தெரியும்.

எனினும் லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கத்தை என்னால் விடமுடியவில்லை என்றார். சில்லறைகளை வங்கி மேலாளர் திருடும் அளவுக்கான சில்லறைகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பாமல் வைத்திருந்தது ஏன் என வங்கி அதிகாரிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 8 ஆண்டுகளாக கரைப்படியாத கைகளுக்கு சொந்தக்காரர் இருந்தவர் தாரக். இவர் ஒரு மாதத்துக்கு 50 ஆயிரம் மதிப்பிலான நாணயங்களை திருடியிருக்கலாம் என அறியப்படுகிறது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

English summary
Tarak Jaiswal, 35, a senior SBI assistant manager in Memari, stole Rs 84 lakh -- all in coins- during the 17 months he spent at the branch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X