நாட்டையே கலக்கும் கண்ணடிப்பு காட்சி உருவானது எப்படி? - மனம் திறந்த புருவ புயல் பிரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஒரே நாளில் டிரெண்டில் இடம்பிடித்த பிரியா-வீடியோ

  டெல்லி: இணையதளம் எங்கும் வைரலாகியுள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

  ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார்.

  இதில் நடித்துள்ள பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் இளைஞர்களையும், இளம் பெண்களையும் கட்டிப்போட்டுள்ளது.

  இதுகுறித்து ஆங்கில சேனல் ஒன்றுக்கு பிரியா அளித்த பேட்டியை பாருங்கள்:

  வைரல் பிரியா

  வைரல் பிரியா

  கே: வைரல் பிரியா என்ற அடைமொழியை எதிர்பார்த்தீர்களா?

  : நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இவ்வளவு பெரிய அளவுக்கு வீடியோ பேசப்படும் என நினைக்கவில்லை. அந்த பாடல் காட்சி நல்லா வந்தது என்று மட்டுமே தெரியும். இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை.

  தேசிய க்ரஷ்

  தேசிய க்ரஷ்

  கே: தேசிய அளவிலான க்ரஷ்ஷாக மாறியுள்ளீர்களே?

  : தற்போது நான் ரொம்பவே ஹேப்பியாக உள்ளேன். இது எனக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் காதலில் விழுந்துள்ளதாக கூறியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

  படமாக்கப்பட்டது எப்படி

  படமாக்கப்பட்டது எப்படி

  கே: ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும் உங்கள் கண் அடிப்பு காட்சி படமாக்கப்பட்டது எப்படி?

  : ஹீரோவுக்கும் எனக்கும் நடுவேயான காட்சியில், ஏதாவது க்யூட்டாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் விரும்பினார். எனவே கண் அடிப்பது, புருவத்தை தூக்கி காட்டுவது செய்ய சொன்னார். நாங்கள் செய்தோம்.

  கே: பலரும் தங்கள் பள்ளி பருவத்து காதலை நினைவுபடுத்துவதாக கூறினர். உங்களுக்கு நினைவுக்கு வந்ததா?

  : நான் மகளிர் கல்லூரியில் படித்து வருகிறோம். எனவே எனது பள்ளி காலத்து நினைவுகள் நினைவுக்கு வருகின்றன.

  பயங்கர வரவேற்பு

  பயங்கர வரவேற்பு

  கே: பாடல் முன்னோட்டத்திற்கு யூடியூப்பில், இதுவரை 4.3 மில்லியன் வியூஸ் கிடைத்துள்ளது. இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட அனைத்து சோஷியல் தளங்களிலும் ஃபாலோவர்கள் அதிகரித்துள்ளனர், எப்படி உணருகிறீர்கள்?

  : எனக்கு எப்படி நடந்துத என்றே தெரியவில்லை. இதனால் பதற்றமாக உள்ளேன். திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Being a national crush is very exciting says Priya Prakash Varrier who is on being the new Internet star.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற