பெட்டர் டாட் காம் விஷால் கார்க்: ஜூம் மீட்டிங்கில் 900 பேரை பணிநீக்கம் செய்த சிஇஓ
அமெரிக்காவைச் சேர்ந்த வீட்டு வசதி கடன் நிறுவனம் ஒன்றில் ஜூம் மீட்டிங் வாயிலாக 900 பணியாளர்களை பணிநீக்கம் செய்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷால் கார்க் என்பவர், பெட்டர்.காம் என்ற வீட்டு வசதி கடன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த வலைதளத்தில் புரோக்கர் கட்டணமின்றி நிலம், வீடு வாங்க கடன் வசதி பெறலாம்.

இந்நிலையில், ஜூம் மீட்டிங் வாயிலாக 900 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளார் விஷால் கார்க்.
விஷால் கார்க், அந்த ஜூம் மீட்டிங்கில், "நீங்கள் இந்த அழைப்பில் இடம்பெற்றிருந்தீர்கள் என்றால் இன்று நமது நிறுவனத்தில் நடைபெறும் ஆட்குறைப்பில் நீங்களும் ஒருவர். நீங்கள் துரதிர்ஷ்டவசமான குழுவைச் சேர்ந்தவர். கடந்த முறை இதே முடிவை எடுத்தபோது நான் அழுதேன்" என தெரிவித்துள்ளார். இச்செய்தி சமூக ஊடகங்கள் வழியாக தெரியவந்துள்ளது.
- அலுவல் நேரத்துக்கு பிறகு ஊழியர்களுக்கு அதிகாரிகள் மெசேஜ் அனுப்ப போர்ச்சுகலில் தடை
- ஊழியர்களுக்கு இருக்கை - 'அங்காடி தெரு' இயக்குநர் எழுப்பும் கேள்விகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில்,இந்த நடவடிக்கை மிகவும் கடுமையானது என பலரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நடவடிக்கை தொடர்பாக விஷால் கார்க் கூறுகையில், பணியாளர்களின் செயல்திறன், சந்தை மாற்றங்களால் 15 சதவீத பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த வாரம் முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட 750 மில்லியன் டாலர் குறித்து விஷால் கார்க் ஏதும் குறிப்பிடவில்லை.
அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கெவின் ரியான் பிபிசியிடம் கூறுகையில், "இந்த சமயத்தில் பணிநீக்கம் செய்வது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. எனினும், வேகமாக வளர்ந்துவரும் வீட்டுவசதி சந்தையில் வளர்ச்சியடைய கவனம் முழுவதையும் அதில் செலுத்தும் பணியாளர்களே தேவை" என தெரிவித்தார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட தனது நிறுவனத்தின் ஊழியர்கள் சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்தும் பணத்தைத் திருடுகிறார்கள் என, முன்னதாக தான் எழுதிய அநாமதேய வலைப்பதிவில் விஷால் கார்க் குற்றம்சாட்டியுள்ளதாக ஃபார்ச்சூன் இதழ் தெரிவித்துள்ளது. மேலும், அப்பதிவில், எட்டு மணிநேரத்திற்கான ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு ஒருநாளில் இரண்டு மணிநேரம் மட்டுமே அவர்கள் பணி செய்வதாகவும் விஷால் கார்க் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாகவும் இவ்வாறான பணிநீக்கத்துக்காக பெயர் பெற்றவர் விஷால் கார்க், ஒரு முறை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்குக் கிடைத்தது.
அந்த மெயிலில் அவர், "நீங்கள் படு மந்தமாக இருக்கிறீர்கள். மந்தமான டால்பின்கள் எனக்கு வேண்டாம். நீங்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்குறீர்கள். உங்கள் பணியை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள்" என்று அந்த மெயிலில் குறிப்பிட்டிருந்தார்.
பணிநீக்க நடவடிக்கையை பிரிட்டனின் சார்ட்டர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன் ஃப்ராங்க் விமர்சித்துள்ளார்.
"மோசமான மேலாளர்கள், நேரடியாகவோ அல்லது மெய்நிகர் வாயிலாகவோ மிக மோசமாக பணிநீக்கம் செய்வார்கள்" என தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்
- குழந்தைகளை விற்கும் தாய்கள்: தமிழ்நாட்டில் குழந்தை விற்பனை எப்படி நடக்கிறது?
- நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் சுட்டுக்கொலை: விசாரணைக்கு உத்தரவு
- 'மனிதாபிமானமற்ற, இழிவான நிலையில் வாழும் மலையகத் தமிழர்கள்' - ஐ.நா அலுவலர் கவலை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
-
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications