For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியும் இல்லை, அமித்ஷாவும் இல்லை.. குஜராத் வெற்றிக்கு பின்னால் இருக்கும் "மாஸ்டர் மைண்ட்"!

குஜராத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு பின்னால் பாஜக தேசிய பொதுச்செயலாளர் புபேந்திர யாதவ் இருப்பதாக அந்த கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'மாஸ்டர் மைண்ட்'!- வீடியோ

    அஹமதாபாத்: குஜராத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு பின்னால் பாஜக தேசிய பொதுச்செயலாளர் புபேந்திர யாதவ் இருப்பதாக அந்த கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இவர் சில நாட்களுக்கு முன்பு பாஜக தலைவர் அமித் ஷாவால் குஜராத் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

    இவரின் கடின உழைப்பின் மூலமாகவே இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியம் ஆகி உள்ளதாக பாஜக கட்சியினர் தெரிவித்து இருக்கின்றனர். அரசியலில் இவரது வரலாற்றை வைத்தே அமித் ஷா மிக முக்கிய பதவியை இவருக்கு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    கடந்த ஒருமதமாக இவர் மிகவும் கடினமாக உழைத்ததாவும், அமித் தேர்தல் சமயத்தில் எப்படி செயல்படுவாரோ அப்படியே இவர் செயல்பட்டதாகவும் பாஜகவினர் கூறியுள்ளனர்.

    புபேந்திர யாதவ்

    புபேந்திர யாதவ்

    புபேந்திர யாதவ் பாஜக கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருக்கிறார். பாஜக தலைவர் அமித் ஷாவை போலவே இவர் செயல்படுவார் என்று கூறப்படுகிறது. உத்திரபிரதேச தேர்தல் முடிந்த கையேடு அமித் ஷா குஜராத் தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது புபேந்திர யாதவை குஜராத் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக தேர்ந்தெடுத்தார். இவர் ஏற்கனவே ராஜஸ்தான், ஜார்கண்ட், பிகார் ஆகிய மாநில தேர்தலில் பொறுப்பாளராக இருந்துள்ளார்.

    சாதனை என்ன

    சாதனை என்ன

    இவர் தேர்தல் பொறுப்பாளராக இருந்த சமயத்தில் மூன்று மாநிலங்களிலும் மிகவும் சிறப்பாக செயலாற்றி இருக்கிறார். ராஜஸ்தான் மாநில தேர்தலில் மிகவும் சிறப்பாக பாஜக கட்சி இவர் மூலம் வென்றது. அதேபோல் ஜார்கண்டில் பாஜக கூட்டணி இவரால் வென்றது. பிகாரில் மட்டும் இவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும் இவரின் கடின உழைப்பை பார்த்த அமித் ஷா குஜராத் தேர்தலிலும் இவரை களம் இறக்கினார்.

    முயற்சி

    முயற்சி

    குஜராத்தில் இவர் வித்தியாசமான வாக்கு சேகரிப்பை செய்துள்ளார். வாக்காளர் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது ஒரு நபராவது பாஜக கட்சி பூத்தில் இருக்கும்படி செய்து இருக்கிறார். இதன் காரணமாக ஒரு தொகுதியில் இருக்கும் மக்களில் 25 சதவிகித மக்களாவது பாஜக பூத் ஏஜெண்டாக இருப்பார்கள். பின் இந்த எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி இருக்கிறார். இதன் மூலம் கட்சியை எல்லா மக்களிடமும் எடுத்து சென்று உள்ளார்கள்.

    பலன் அளிக்காது

    பலன் அளிக்காது

    பெரிய வாகனங்களில் செய்யும் பிரச்சாரம் பலன் அளிக்காது என்று இவர் கூறியுள்ளார். இவர் தனது தொண்டர்களுடன் சேர்ந்த போஸ்டர் வரை அடித்ததாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரம் முடியும் நாளுக்கு முன்பு வரை இவர் சரியாக தூங்காமல் பிரச்சாரம் செய்து இருக்கிறார். மேலும் வீடு வீடாக பிரச்சாரம் செய்வதே அதிக பலன் அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

    English summary
    Bhupender Yadav, who is the BJP National General Secretary, and election in-charge in Gujarat gave a great victory to BJP. He did a good job than the Amit Shah and Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X