For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை தொழிலதிபரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியானதால் பீகார் அமைச்சர் ராஜினாமா!

By Mathi
Google Oneindia Tamil News

பாட்னா: மும்பை தொழிலதிபரிடம் ரூ. 4 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியானதால் பீகார் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவதேஷ் குஷ்வாகா தமது பதவியை ராஜினாமா செய்தார்.

பீகார் மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் இருந்தவர் அவதேஷ் குஷ்வாகா. இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்ற ரகசிய வீடியோ நேற்று அம்பலமானது.

Bihar minister Awadhesh Kushwaha quits over bribery video

தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் அந்த தொழிலதிபருக்கு உதவுவதாக குஷ்வாகா பேசியது வீடியோவில் பதிவாகி இருந்தது. ஆனால் இக் குற்றச்சாட்டை முதலில் மறுத்தார் அமைச்சர் குஷ்வாகா.

இந்த வீடியோவை ஆராய்ந்த முதல்வர் நிதிஷ்குமார், குஷ்வாகாவை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமது அமைச்சர் பதவியை அவர் நேற்று இரவு ராஜினாமா செய்தார்.

பீகாரில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெற்ற நிலைய்ல் இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

டெல்லியில் இதேபோல் உணவுத் துறை அமைச்சராக இருந்த ஆசிம் அகமது கான் பேரம் பேசிய வீடியோ வெளியானதால் அவரை செய்தியாளர்கள் முன்னிலையில் அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் டிஸ்மிஸ் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Bihar’s Minister Awadhesh Kushwaha resigned on Sunday after he was caught on camera while allegedly accepting Rs 4 lakh from individuals posing as businessmen from Mumbai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X