For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியுடன் சண்டையிட்டு குழந்தையை தந்தை கூட்டிச் செல்வது கடத்தல் ஆகாது.. கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

பெற்ற குழந்தையை தந்தை அழைத்து செல்வது கடத்தல் ஆகாது என்று மும்பை நீதிமன்றத்தில் மத்திய அரசு தன் வாதத்தை முன்வைத்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மும்பை: தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின்போது தாயிடம் உள்ள குழந்தையை பெற்ற தந்தை தன்னுடன் அழைத்து செல்வது கடத்தல் ஆகாது என்று மும்பை நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதத்தை முன்வைத்தது.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜித் ஷா. இவரது மனைவி நஜ்நீன். டச்சு நாட்டைச் சேர்ந்தவர். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன் குழந்தையை அழைத்துக் கொண்டு நெதர்லாந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் தனது 2 வயது பெண் குழந்தையை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்சடர் டாமில் கடந்த செப்டம்பர் 2016-இல் ஷாஜித் இந்தியாவுக்கு அழைத்து வந்தார். இதைத் தொடர்ந்து நஜ்நீன் தன் குழந்தையை ஷாஜித் கடத்தி சென்றுவிட்டதாக அந் நாட்டில் புகார் செய்தார்.

இந்திய அரசை தொடர்பு

இந்திய அரசை தொடர்பு

இதனிடையே தன் மகளை அவரது தந்தை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுவிட்டார் என்று நஜ்நீன் இணையத்தில் பிரச்சாரமும் செய்தார். இன்டர்போல் அளித்த நோட்டீஸை தொடர்ந்து நெதர்லாந்து அரசு இந்திய அரசை தொடர்பு கொண்டது.

நாடு கடத்த வேண்டும்

நாடு கடத்த வேண்டும்

அப்போது டச்சு அதிகாரிகள் ஷாஜித்தை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடத்தல் ஆகாது

கடத்தல் ஆகாது

இது தொடர்பான விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்றது. வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அப்போது பெற்ற குழந்தையை தந்தை அழைத்து வருவது கடத்தல் ஆகாது.

நடவடிக்கை கூடாது

நடவடிக்கை கூடாது

எனவே ஷாஜித்தை கைது செய்ய வேண்டும், நாடு கடத்த வேண்டும் என்ற டச்சு அரசின் மனுவை நிராகரித்தது. அதேசமயம் தந்தைக்கும், மகளுக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று தெரிவித்தது.

English summary
The External Affairs ministry has told a court in Mumbai that a man cannot be charged with kidnapping his child. The court was hearing a petition by a Mumbai businessman who was challenging his extradition request from the Netherlands to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X