For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலியல் புகாரை திரும்பபெற்றால் ரூ.5 கோடி.. கன்னியாஸ்திரியிடம் டீல் பேசும் கேரள பிஷப்!

தன் மீதான பாலியல் புகாரை திரும்பப்பெற்றால் 5 கோடி ரூபாய் பணம் தருவதாக குற்றச்சாட்டுக்குள்ளான கேரள பிஷப் டீல் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தன் மீதான பாலியல் புகாரை திரும்பப்பெற்றால் 5 கோடி ரூபாய் பணம் தருவதாக குற்றச்சாட்டுக்குள்ளான கேரள பிஷப் டீல் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.

அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பலமுறை பிஷப் பிராங்கோ முலக்கல் தன்னை பலாத்காரம் செய்ததாக அவர் கூறினார்.

நியாயம் கேட்டு போராட்டம்

நியாயம் கேட்டு போராட்டம்

இதுதொடர்பாக திருச்சபை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சக கன்னியாஸ்திரிகள் பலர் கடந்த சில நாட்களாக கொச்சியில் நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வாடிகனுக்கு கடிதம்

வாடிகனுக்கு கடிதம்

இன்னும் அரசு விசாரணையில் திருப்தி ஏற்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கள்ளத்தொடர்பு

கள்ளத்தொடர்பு

ஆனால் பிஷப் பிராங்கோ தன் மீதான புகாரை மறுத்து உள்ளார். புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு அவரது உறவினர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது என்று கேரள இயேசு சபை குற்றம்சாட்டியிருந்தது.

டீல் பேசும் பிஷப்

டீல் பேசும் பிஷப்

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை வாபஸ் பெற்று கொண்டால் ரூ 5 கோடி தருவதாக பிஷப் பிராங்கோ முலக்கல் பேரம் பேசியதாக பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர் கூறி உள்ளார்.

டீலா நோ டீலா?

டீலா நோ டீலா?

பிராங்கோ முலக்கல் மற்றும் 2 பாதிரியார்கள் பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களை அணுகி பிஷப் மீதான புகாரை வாபஸ் பெற்று கொண்டால் ரூ.5 கோடி தருவதாக கூறி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

English summary
Bishop dealing with the Nun family to withdraw the sexual harrasment complaint against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X