For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பா.ஜ.க இணையதளத்துக்கு பாகிஸ்தானில் அதிரடி தடை!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பாகிஸ்தானில் உள்ளவர்கள் பார்க்க முடியாதபடி அக்கட்சி தடுத்துள்ளது.

நாட்டின் 16வது லோக்சபா தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜகவே அடுத்த ஆட்சி அமைக்கும் என்றும் அக்கட்சியின் நரேந்திர மோடியே பிரதமராவார் என்றும் கூறிவருகின்றன.

இதுபற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்வதற்காக பாஜக இணையதளத்தை பாகிஸ்தானியர்கள் ஏராளமானோர் பார்வையிடுவதாக கூறப்பட்டு வந்தது. குறிப்பாக பாஜக தளத்தில் நரேந்திர மோடி பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்களாம். இந்நிலையில் பாஜகவின் இணையதளம், பாகிஸ்தானில் இருந்து பார்வையிடமுடியாதபடி முடக்கப்பட்டுள்ளது. பாஜகவின் சார்பில்தான் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் வெப்சைட் பாகிஸ்தானை சேர்ந்தவரால் இரு நாட்களுக்கு முன்பு, ஹேக் செய்யப்பட்ட நிலையில், பாஜக இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அதே நேரம் நரேந்திரமோடி குறித்த போர்டலை பாகிஸ்தான் நாட்டில் இருந்து பார்க்க முடியும். தேர்தலுக்கு பின் இந்தியாவில் ஆட்சி அமைக்கப்போவது யாராக இருந்தாலும் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அரசுத் தரப்பு கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

English summary
People in Pakistan cannot access the BJP website as the saffronBSE -4.62 % party has blocked its Internet page though its high-profile Prime Ministerial candidate Narendra Modi's portal can be accessed for those who want to know about him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X