For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முசாஃபர்நகரில் "பழிவாங்கும்" பேச்சு: அமித் ஷா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ: முசாஃபர்நகர் கலவரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதே மாநிலம் பிஜ்னோரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முசாஃபர்நகர் கலவரம் குறித்து அமித் ஷா பேசினார். அப்போது "நம்மை காயப்படுத்தியவர்களை தேர்தலில் பழிவாங்க வேண்டும். அநீதி இழைத்தவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்'' என்று அவர் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

BJP chief Amit Shah chargesheeted by UP police for hate speech

இதனையடுத்து அமித் ஷா மீது "மக்களை வன்முறைக்குத் தூண்டியது (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 153), குழுக்கள் இடையே மோதலை உருவாக்கியது (பிரிவு 125) ஆகிய பிரிவுகளின் கீழ் முசாஃபர் நகர் மாவட்ட போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று முசாஃபர்ர் நகர் போலீஸார் அமித் ஷாமீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

English summary
BJP president Amit Shah was chargesheeted by Muzaffarnagar police on Wednesday for his alleged hate speeches in April this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X