முசாபர்நகர் வன்முறை: பாஜக, பகுஜன் எம்.எல்.ஏ.க்கள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முசாபர்நகர் வன்முறைக்கு காரணமாக இருந்ததாக பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ் ராணா, சங்கீத் சோம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நூர் சலீம் ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் பலியாகினர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறினர்.

16 பேருக்கு கைது வாரண்ட்

16 பேருக்கு கைது வாரண்ட்

இந்தக் கலவரம் தொடர்பாக பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 16 அரசியல்தலைவர்களுக்கு கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது.

பாஜக எம்.எல்.ஏ. கைது

பாஜக எம்.எல்.ஏ. கைது

இந்நிலையில் முசாபர்நகரில் வன்முறையைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ் ராணாவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மற்றொரு எம்.எல்.ஏ. சரண்

மற்றொரு எம்.எல்.ஏ. சரண்

இதைத் தொடர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் போலி வீடியோ காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட மற்றொரு பாஜக எம்.எல்.ஏ.சங்கீத் சோம் இன்று போலீசில் சரணடைந்தார்.

பகுஜன் எம்.எல்.ஏ. கைது

பகுஜன் எம்.எல்.ஏ. கைது

இதனிடையே பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ. நூர் சலீம் ராணாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP MLA from Thana Bhawan Suresh Rana accused of inciting communal violence in Muzaffarnagar was arrested here on Friday
Please Wait while comments are loading...