For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லே பகுதியில் முதல்முறையாக பறக்கவிடப்பட்ட தேசியக் கொடி.. நடனடம் ஆடி மகிழ்ந்த லடாக் எம்பி நம்ஜியால்!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: சுதந்திர தினவிழாவையொட்டி இன்று ஸ்ரீநகரில் முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த லடாக் எம்பி ஜம்யாங் செரிங் நம்ஜியால் பாரம்பரிய நடனம் ஆடினார்.

நாடு முழுவதும் 73ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் செங்கோட்டையில் இன்று காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

BJP MP from Ladakh, Jamyang Tsering Namgyal dances in Leh

முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட மோடி, ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 நீக்கம் வல்லபாய் படேலின் கனவு ஆகும். அது தற்போது நனவாகிவிட்டது என்றார்.

இந்த நிலையில் காஷ்மீர், லடாக் பகுதியில் முதல்முறையாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இத்தனை காலமாக சிறப்பு அந்தஸ்தால் காஷ்மீருக்கென தனிக் கொடி இருந்தது. ஆனால் தற்போது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு விட்டதால் இன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

ஷேர் இ காஷ்மீர் ஸ்டேடியத்தில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இந்த நிலையில் லடாக் பகுதியில் நடந்த சுதந்திர தின விழாவில் பாஜக எம்பி ஜம்யாங் செரிங் நம்ஜியால் தனது ஆதரவாளர்களுடன் பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை சில அரசியல்வாதிகள் தவறாக பயன்படுத்திவிட்டனர் என்றும் கடந்த 6-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதில் லடாக் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என ஜம்யாங் செரிங் நம்ஜியால் எம்பி பேசியது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP MP from Ladakh, Jamyang Tsering Namgyal (in front) dances while celebrating 73rd IndiaIndependence Day, in Leh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X