For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் தேர்தல்: 5- வது முறையாக மாபெரும் வெற்றியுடன் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக: டைம்ஸ் நவ் சர்வே

குஜராத் சட்டசபை தேர்தலில் 5-வது முறையாக மாபெரும் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்கிறது டைம்ஸ் நவ் சர்வே.

By Mathi
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 5-வது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் என்கிறது டைம்ஸ் நவ் டிவி சேனல்-விஎம்ஆர் சர்வே.

குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

5-வது முறையாக பாஜக ஆட்சி

5-வது முறையாக பாஜக ஆட்சி

இத்தேர்தலில் யார் வெல்வார்கள் என்பது தொடர்பாக டைம்ஸ் நவ்- விஎம்ஆர் இணைந்து கருத்து கணிப்பை நடத்தி உள்ளன. இந்த கருத்து கணிப்புகளில் பாஜக 5-வது முறையாக வென்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு 118-134 இடங்கள்

பாஜகவுக்கு 118-134 இடங்கள்

தற்போதைய தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்போம் என 52% பேர் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் பாஜகவுக்கு 118 முதல் 134 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

காங்கிரஸுக்கு 49-61 இடங்கள்

காங்கிரஸுக்கு 49-61 இடங்கள்

இத்தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிப்பதாக 37% பேர் கூறியுள்ளனர். அதாவது காங்கிரஸுக்கு 49 முதல் 61 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

அதிகபட்சம் 3 இடங்கள்

அதிகபட்சம் 3 இடங்கள்

பாஜக, காங்கிரஸ் அல்லாமல் மற்ற கட்சிகளுக்கு வாக்களிப்போம் என 11% பேர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மற்ற கட்சிகளுக்கு அதிகபட்சம் 3 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது டைம்ஸ் நவ் சர்வே

English summary
According to the Times Now-VMR survey in Gujarat has predicted comfortable victory for BJP; Congress and other parties trailing by around 15%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X