ம.பி.யில் 'தாய்வீடு' காங்கிரஸுக்கு திரும்பும் 2 எம்.எல்.ஏக்கள்... பாஜக கடும் அதிர்ச்சி
Recommended Video
போபால்: மத்திய பிரதேசத்தில் தாய்வீடான காங்கிரஸுக்கு 2 எம்.எல்.ஏக்கள் திரும்புவது பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து குமாரசாமி அரசை கவிழ்த்தது பாஜக. இதையடுத்து மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸை கவிழ்க்கும் நடவடிக்கைகளை பாஜக தொடங்கியது.
அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா, பாஜகவின் நம்பர் 1, நம்பர் 2 உத்தரவிட்டால் அடுத்த 24 மணிநேரத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்க்கப்படும் என கூறியிருந்தார். ஆனால் பார்கவ் இப்படி கூறிய சில மணிநேரங்களிலேயே பாஜகவுக்கு மூக்குடைப்புதான் கிடைத்தது.

2 பாஜக எம்.எல்.ஏக்கள் பல்டி
சட்டசபையில் கமல்நாத் அரசு கொண்டு வந்த குற்றவியல் சட்ட திருத்த மசோதாவுக்கு பாஜகவின் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 2 எம்.எல்.ஏக்களும் திடீரென மாயமாகி திரும்பினர்.

மாஜி காங்கிரஸார்
மைகார் தொகுதி எம்.எல்.ஏ. திரிபாதி, பியோகாரி தொகுதி எம்.எல்.ஏ. கோல் ஆகிய இருவரும்தான் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள். இவர்கள் 2 பேருமே காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்கள்.

தாய்வீடு திரும்புகிறோம்
இது தொடர்பாக திரிபாதி கூறுகையில், பிற கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு பாஜக மரியாதை தருவதில்லை. போலியான வாக்குறுதிகளைத்தான் பாஜக தருகிறது. தற்போது நாங்கள் தாய்வீடு திரும்புகிறோம் என்றார்.

பாஜக கடும் அதிர்ச்சி
2 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் பக்கம் தாவியதால் பாஜக கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. இந்த 2 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பாஜக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications