For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவை வேவு பார்த்த விவகாரம்: அமெரிக்கா தூதரக உயர் அதிகாரிக்கு மத்திய அரசு சம்மன்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியை அமெரிக்கா வேவு பார்த்த விவகாரம் குறித்து கடுமையான எதிர்ப்பை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி உட்பட 6 வெளிநாட்டு அரசியல் கட்சிகளை அமெரிக்கா வேவு பார்த்ததாக திடுக்கிடும் தகவல்கள் நேற்று வெளியாகி இருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு இன்று சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ஏற்று தூதரக உயர் அதிகாரி ஒருவர் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்தியாவின் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்ற உறுதிமொழியைத் தருமாறும் அமெரிக்கா தூதரக அதிகாரியிடம் இந்திய தரப்பில் உறுதி கோரப்பட்டது. இருப்பினும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வந்த அமெரிக்க தூதரக அதிகாரியின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.

English summary
Reacting strongly to reports of BJP being spied upon by US National Security Agency (NSA), India on Wednesday summoned a top US diplomat here to raise the issue, saying it was "totally unacceptable" that an Indian organization or Indian individual's privacy was transgressed upon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X