For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல்: முதல்கட்ட தேர்தலான 7ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது பாஜக

|

டெல்லி: வரும் ஏப்ரல் 7ம் தேதி அதாவது முதல்கட்ட லோக்சபா தேர்தலன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட இருப்பதாக பா.ஜ.க அறிவித்துள்ளது.

16வது லோக்சபா தேர்தல் வரும் 7ம் தேதி தொடங்கி மே மாதம் 12ம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பிரச்சாரப் பணியில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

BJP will release manifesto on April 7

ஆனால், பிரதமர் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாஜக இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இதற்கிடையே பாஜகவில் மூத்தத் தலைவர்கள் புறக்கணிக்கப் படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுவே தேர்தல் அறிக்கையின் தாமதத்திற்கு காரணம் எனச் சொல்லப் பட்டது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், ‘வரும் 7ம் தேதி பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், முதல் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள நாளான அன்று பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டால் அவை ஊடகங்களில் வெளியிடப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.

English summary
The Bharatiya Janata Party will release its manifesto on April 7, the day polling begins for the 2014 Lok Sabha elections. However, the party may not be able to publicise or broadcast its manifesto on the same day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X