'கருப்புக்கொடி' மோடி மோடி என கோஷம்! குஜராத் பிரசார கூட்டத்தில் அசாதுதீன் ஓவைசிக்கு எதிர்ப்பு
அகமதாபாத்: குஜராத்தில் டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இதில், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் மோடி மோடி என கோஷமிட்டதாலும் கருப்புக்கொடி காண்பித்ததாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
182- தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.

குஜராத் சட்டசபை தேர்தல்
ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கவும் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆட்சியை கைப்பற்றவும் கோதாவில் இறங்கியுள்ளன. ஐதராபாத் எம்.பி ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் குஜராத்தில் போட்டியிடுகிறது. மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களிலும் ஓவைசி கட்சி போட்டியிட்டது. சிறுபான்மை வாக்குகளை பிரித்து பாஜகவின் பி டீம் போல ஓவைசி செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் விமர்சனங்கள் முன்வைத்தாலும் ஓவைசி கட்சி போட்டியிட்டு வருகிறது.

ஓவைசி பிரசாரம்
அந்த வகையில் குஜராத்தில் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் மட்டும் ஓவைசி கட்சி போட்டியிடுகிறது. ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஓவைசி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சூரத் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து ஓவைசி பிரசாரம் மேற்கொள்வதற்காக வந்திருந்தார்.

மோடி மோடி என கோஷம்
நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் பேசுவதற்காக ஓவைசி மேடை ஏறியதும் அங்கு இருந்த முஸ்லிம் இளைஞர்கள் உள்பட சில இளைஞர்கள் மோடி மோடி என கோஷம் எழுப்பினர். ஓவைசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடிகளையும் காட்டினர். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும் இதை கண்டுகொள்ளாமல் ஓவைசி பேசத்தொடங்கினார்.

ரயில் மீது கல்வீச்சு
முன்னதாக கடந்த வாரம் ஓவைசி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக அகமதாபாத் நகரில் இருந்து சூரத் நகரத்திற்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தார். சூரத் நகரத்திற்கு முன்பு ரயில் வந்த போது மர்ம நபர்கள் ரயில் மீது கற்களை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வந்தே பாரத் ரயிலின் ஜன்னலை நோக்கி கற்கள் வீசப்பட்டதாகவும் இதில் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்ததாகவும் ஓவைசி கட்சியின் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியிருந்தார்.

குஜராத் போலீசார் மறுப்பு
ஆனால் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று மறுத்த குஜராத் ரயில்வே போலீசார், ஓவைசி பயணித்த ரயில் பெட்டியில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததாகவும் விளக்கம் அளித்து இருந்தனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications