For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருப்பு பண முதலை பங்கஜ் லோதியா... பின்னணி என்ன?

By Siva
Google Oneindia Tamil News

ராஜ்கோட்: தனக்கு வெளிநாட்டு வங்கியில் கணக்கே இல்லை என சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்திருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்த பங்கஜ் சிமன்லால் லோதியா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக மத்திய அரசு 3 பேரின் பெயர்களை உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளது. அந்த 3 பேரில் ஒருவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் பங்கஜ் சிமன்லால் லோதியா.

இந்நிலையில் தனக்கு வெளிநாட்டில் வங்கி கணக்கே இல்லை. அப்படி இருக்கையில் கருப்பு பணம் வைத்திருப்பதாக வந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று லோதியா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஜி வர்த்தக நிறுவனம்

ஸ்ரீஜி வர்த்தக நிறுவனம்

பங்கஜ் சிமன்லால் லோதியா தங்க வர்த்தக நிறுவனமான ஸ்ரீஜி வர்த்தக நிறுவனத்தை ராஜ்கோட்டில் கடந்த 1997ம் ஆண்டு துவங்கினார். அந்த நிறுவனத்தின் இணையதளத்தின்படி அது முதலில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு பின்னர் தங்க வர்த்தகத்திற்கு சென்றுள்ளது. அந்த நிறுவனம் லோதியாவின் தந்தை ஸ்ரீ சிமன்லால் லால்ஜிபாய் லோதியா மற்றும் அவரின் சகோதரர் ஸ்ரீ கௌசிக் சிமன்லால் லோதியா ஆகியோரின் உதவியுடன் துவங்கப்பட்டது என்று இணையதளத்தில் உள்ளது.

2 நிறுவனங்கள்

2 நிறுவனங்கள்

ஸ்ரீஜி வர்த்தக குழுமத்தில் மேலும் 2 நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்றான ஸ்ரீஜி ஆர்னமென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளை செய்து விற்பனை செய்கிறது. மற்றொறு நிறுவனமான ஸ்ரீஜி ரியாலிட்டி வீடுகளை கட்டிக் கொடுக்கிறது.

கிளைகள்

கிளைகள்

ராஜ்கோட் சந்தையில் லோதியா நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. தங்க வர்த்தகத்தில் அந்நிறுவனத்தின் கிளைகள் அகமதாபாத், டெல்லி, ஜெய்பூர், ராய்பூர், இந்தூர் மற்றும் பெங்களூரில் உள்ளது. கேரளாவில் கிளை துவங்கும் திட்டமும் உள்ளது. நம்பிக்கை, தூய்மை, நேர்மை எங்களின் தாரகமந்திரம் என்று அந்நிறுவன இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்

லண்டன்

லண்டன் தங்க வர்த்தகர்கள் அசோசியேஷனுடன் ஸ்ரீஜி வர்த்தக நிறுவனத்திற்கு தொடர்பு உள்ளது. மேலும் அந்நிறுவனத்திற்கு தேசிய, சர்வதேச அளவில் தங்க வர்த்தகர்களுடன் தொடர்பு உள்ளது. பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு அது தங்க நாணயங்களை வழங்கி வருகிறது.

ஐ.டி.

ஐ.டி.

நான் என் சொத்து விவரங்கள் அனைத்தையும் வருமான வரித்துறையிடம் தெரிவித்துவிட்டேன். எனக்கு அரசியல் தொடர்பு எதுவும் கிடையாது என்று லோதியா தெரிவித்துள்ளார்.

English summary
Pankaj Chimanlal Lodhiya, whose is named as one of the black money account holder rubbished the news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X