சிதறிய சதை துண்டுகள்.. ரத்தத்தில் மூழ்கிய பிணங்கள்! விபத்து நடந்ததே தெரியாமல் உள்ளே இருந்த பயணிகள்
புவனேஷ்வர்: ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தை நேரில் கண்ட பயணி ஒருவர் தான் நேரில் கண்ட கோரமான காட்சிகளை விவரித்து இருக்கிறார். பதை பதைக்க வைக்கும் அந்த காட்சிகளை தன்னால் மறக்கவே முடியாது என்று அவர் கூறி இருக்கிறார்.
ஒடிசாவில் பாலசோரில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தை நேரில் கண்டவர்களில் சந்தோஷ் ஜெயினும் ஒருவர். ஷிகார்ஜி யாத்திரை செல்லும் 110 பயணிகளில் ஒருவரான இவர் கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் கலசாவை சேர்ந்தவர். பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸில் இவர் பயணித்து இருக்கிறார்.

நேற்று இரவு விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அருகே உள்ள மற்றொரு ரயில் பாதையில் இவர் சென்ற ரயில் பயணித்து இருக்கிறது. அப்போதுதான் கண்ட பதைபதைக்க வைக்கும் காட்சிகளை பகிர்ந்து இருக்கிறார். "இரவு 8:30 மணி இருக்கும். பெரிய சத்தம் கேட்டு ரயில் திடீரென நின்றது.
எங்களுக்கு முன்னால் இருந்த ஏசி மற்றும் பொது பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மோதியது. அந்த 2 பெட்டிகள் மட்டும் தனியாக துண்டிக்கப்பட்டது. உடனே நாங்கள் கீழே இறங்கி விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை பார்த்தோம். முதலில் விபத்து நடந்ததை நாங்கள் உணரவில்லை. ரயில் நின்றதாகவே நினைத்தோம்.
ரயிலைவிட்டு இறங்கிய பிறகுதான் மிகப்பெரிய விபத்து நடந்திருப்பதே தெரிந்தது. எங்களுக்கு முன்னால் இருந்த 2 ரயில் பெட்டிகளை காணவில்லை என்பதை அறிந்தோம். மிகவும் இருட்டாக இருந்தது செல்போன் டார்ச் லைட்டை போட்டுவிட்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றோம். விபத்து ஏற்பட்ட குறிப்பிட்ட பகுதிக்கு சென்றபோதுதான் அந்த அதிர்ச்சி காட்சியை கண்டோம்.
நான் சில உடல்கள் தண்டவாளத்தில் கிடப்பதை பார்த்தேன். அந்த உடல்கள் முழுக்க ரத்தத்தால் மூழ்கி இருந்தன. அந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. விபத்து நடந்த பகுதிக்கு அருகே உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் ஏணிகளை எடுத்துவந்த ரயில் பெட்டிக்குள் இருந்தவர்களை மீட்க உதவினார்கள்.
உடல்களை அவர்கள் எடுத்து வந்து ரயில் தண்டவாளத்திற்கு அருகே போட்டார்கள். அது மிகவும் வலி நிறைந்த காட்சியாக இருந்தது. நான் என்ன கண்டேன் என்பதை சொல்லும் நிலையில் கூட அப்போது இல்லை. அதன் பிறகு காவல் துறையும் ஆம்புலன்ஸும் வேகமாக அந்த இடத்துக்கு வந்தார்கள்." என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications