எல்லை பிரச்சனை: மிசோரமுடன் மோதி 6 போலீசார் பலி எதிரொலி- மேகாலயாவுடன் அஸ்ஸாம் அமைதிப் பேச்சுவார்த்தை!
குவஹாத்தி: அஸ்ஸாம் மற்றும் மேகாலயா இடையே 12 இடங்களில் நீடிக்கும் எல்லை பிரச்சனைகள் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் இன்று குவஹாத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இரு மாநில எல்லைகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண குழுக்கள் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அஸ்ஸாம் மாநிலத்துடன் இதர வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றுடன் எல்லை பிரச்சனை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதில் மிசோரமுடனான எல்லை பிரச்சனை மிக மோசமான நிலைக்குப் போய்விட்டது.
கடந்த மாதம் 26-ந் தேதி மிசோரம்- அஸ்ஸாம் எல்லை பிரச்சனையின் உச்சமாக இரு மாநில போலீசாரும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 6 அஸ்ஸாம் போலீசார் கொல்லப்பட்டனர்.

மிசோரம் மீது பொருளாதார தடை
இதனால் கொந்தளித்துப் போன அஸ்ஸாம் மக்கள், மிசோரம் நெடுஞ்சாலையை மறித்து அறிவிக்கப்படாத பொருளாதார தடையை அமல்படுத்தி உள்ளனர். இதனால் மிசோரமில் அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. அஸ்ஸாம்- மிசோரம் எல்லையானது இருநாடுகளின் எல்லையைப் போல காட்சி தருகிறது. பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டும் ஏதோ எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகள் போல இரு மாநில போலீசாரும் துப்பாக்கி ஏந்திய நிலையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

அஸ்ஸாம்- மேகாலயா பேச்சுவார்த்தை
இந்த நிலையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா இருவரும் இன்று குவஹாத்தியில் எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அஸ்ஸாம், மேகாலயா இடையே 12 இடங்களில் எல்லை பிரச்சனை உள்ளது. மிசோரமுடன் எல்லை மோதல் நடந்து கொண்டிருந்த போது மேகாலயா அரசு எல்லையில் பதித்திருந்த மின்கம்பங்களை அஸ்ஸாம் அதிகாரிகள் பிடுங்கி எறிந்தனர். உடனடியாக இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியதால் அசம்பாவிதங்கள் நிகழவில்லை.

2-வது கட்ட பேச்சுவார்த்தை
இம்மோதல் தொடர்பாகவும் இன்று இரு மாநில முதல்வர்களும் ஆலோசனை நடத்தினர். ஏற்கனவே ஜூலை 23-ந் தேதி இரு மாநில முதல்வர்களும் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காண அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.

இரு மாநில குழுக்கள்
இப்பேச்சுவார்த்தைகளின் முடிவில் இருதரப்பிலும் தலா மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடிவு எட்டப்பட்டது. இப்பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, எங்கள் தரப்பில் எந்த பிரச்சனையும் இல்லை. மேகாலயா மாநிலம்தான் சில இடங்களில் தங்களுடைய பகுதி என உரிமை கோருகிறது. 12 இடங்களில் இந்த எல்லை பிரச்சனை இருக்கிறது. அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காணவும் முடியாது. முதல் கட்டமாக 6 எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குறிப்பிடும் 6 எல்லை தகராறு உள்ள இடங்களில் 3 அஸ்ஸாம் பகுதியிலும் 3 மேகாலயா பகுதியிலும் வருகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தைதான் சரி...
குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய மேகாலயா முதல்வர் கான்ராட் சர்மா, விட்டுக் கொடுத்து எடுத்துக் கொள்வது என்கிற கொள்கையின் அடிப்படையில் எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறோம். இதனைத்தான் பல மாநிலங்களும் எல்லை பிரச்சனைகளில் கையாண்டிருக்கின்றன. தொடக்கம் முதலே இரு மாநில முதல்வர்களும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதில்தான் முனைப்பாக இருக்கிறோம். எல்லை பிரச்சனைகளுக்கு 15,20 ஆண்டுகளுக்கு முன்னரே மேகாலயா அரசு தீர்வு கண்டிருக்க வேண்டும். தற்போது நிலைமை வேறாக உள்ளது. இப்போதும் தாமதம் என நினைக்காமல்தான் செயல்பட்டு வருகிறோம். பல பத்தாண்டுகளாக நீடிக்கின்ற எல்லை பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என நம்புகிறோம். முன்னதாக மேகாலயா 2 மாநில அமைச்சர்கள் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் அடங்கிய குழு எல்லை பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்த உருவாக்கப்பட்டது. அதேபோல் அஸ்ஸாம் மாநில அமைச்சர்கள் 2 பேரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டது. இந்த குழுக்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்தே இரு மாநில முதல்வர்களும் குவஹாத்தியில் பேச்சுவார்த்தையை நடத்தி குழுக்கள் அமைப்பது என முடிவு செய்துள்ளனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications