ஜூலையில் ஜி.எஸ்.டி சட்டம் அமல்.. துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜி.எஸ்.டி மசோதாவை செயல்படுத்துவதற்கு ஏதுவாக துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுக்க ஜி.எஸ்.டி வரி மசோதாவை செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு வசதியாக சில துணை மசோதாக்களை நிறைவேற்ற தேவையிருந்தது.

Cabinet clears 4 GST Bills - CGST, IGST, UT GST & Compensation Bills

CGST, Integrated-GST, UT-GST மற்றும் துணை மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம். பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த மசோதாக்கள் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மாநில சட்டசபைகளில் பிறகு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India's cabinet has approved five bills to implement a planned Goods and Services Tax (GST) bills, a government official said on Monday.
Please Wait while comments are loading...