மனைவி இருக்கிறபோதே.. வேற பெண்ணுடன் "லிவ்-இன்-வாழ்க்கை"? இஸ்லாத்தில் இப்படி இல்லையே? நீதிபதி நறுக்
கான்பூர்: முக்கிய வழக்கு ஒன்றில் அலகாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியிருக்கிறது. இந்த தீர்ப்பு பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
மனைவி இருக்கும் போது கணவன், மற்றொரு பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ சட்டப்படி உரிமையில்லை என அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

விசித்திரம்: நீதிமன்றத்தில் எத்தனையோ விசித்திரமான தீர்ப்புகள் தரப்படுகின்றன.. அதேபோல, விநோதமான வழக்குகளும் வந்துள்ளன.. இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு ஒரு குடும்ப வழக்கு டெல்லி கோர்ட்டுக்கு போனது.
ஒரு தம்பதியிடையே பாலியல் உறவு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.. இதனால், கருத்து வேறுபாடுகள் தம்பதிக்குள் அதிகரித்து வந்துள்ளது. அதாவது, திருமணமானது முதலே, பாலுறவை மனைவி தவிர்த்துவந்தாராம்.. இதுதான் வழக்கின் சாராம்சம்.
கோர்ட்: அதனால், கோர்ட்டுக்கு சென்ற கணவன், தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டார்.. இது தொடர்பான விசாரணை நடந்தபோது, மனைவியின் தரப்பில், "பாலுறவு என்றாலே அச்சத்துக்கு ஆளாகும் ஜீனோபோபியா" என்ற நோய் இருப்பதாக வாதாடப்பட்டது..
இந்த வழக்கை விசாரித்த டெல்லி குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதி விபின் குமார் ராய், "சுயமாக தன்னுடைய கணவனை முடிவெடுத்த பெண், திருமணத்துக்கு முன்பாக 11 மாதங்கள் பழகி தெளிந்த பிறகும், திருமணமான பிறகு வேண்டுமென்றே பாலுறவை தவிர்த்திருக்கிறார்.. பாலுறவு என்பது இல்லற வாழ்க்கையின் அடித்தளங்களில் ஒன்று.
தம்பதி: கணவன் - மனைவி இருவரில் ஒருவர் மற்றவருக்கு அதனை மறுப்பது மனரீதியிலான கொடுமை செய்வதற்கு இணையானது. மகிழ்வான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான பாலுறவை வேண்டுமென்றே தவிர்ப்பது குடும்ப அமைதியை குலைக்கும்" என்று சொல்லி, கணவன் கோரிய விவாகரத்தினை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி.
கணவன் - மனைவி இருவரில் ஒருவர், வேண்டுமென்றே பாலுறவைத் தவிர்ப்பது, மனரீதியிலான கொடுமைப்படுத்துவதில் சேரும் என்று வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, பலரது கவனத்தையும் அப்போது திரும்பி பார்க்க வைத்திருந்தது. இதோ உத்தரபிரதேசத்தில் ஒரு வழக்கின் தீர்ப்பும், மக்களின் பெருத்த கவனத்தை பெற்று வருகிறது.
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் முகமது சதாப்கான்.. இவர் சினேகா தேவி என்பவரை காதலித்தார்.. கடந்த 2020ம் ஆண்டு, இவர்கள் 2 பேரும் தனியாக வீடு எடுத்து, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்..
இந்த விஷயம், சினேகாவின் பெற்றோருக்கு தெரிந்துவிட்டது. அதனால் தங்களது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்டு போலீசுக்கு ஓடினார்கள்.. ஆனால், இந்த காதல் ஜோடியோ, அலகாபாத் ஹைகோர்ட்டுக்கே சென்றுவிட்டார்கள். தாங்கள் 2 பேருமே மேஜர் என்றும், திருமண வயதை எட்டிவிட்டதால், தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக முடிவு செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உண்டு என்றும் சொல்லி வழக்கு ஒன்று தொடுத்தனர்.
விசாரணை: இந்த வழக்குதான் நேற்று விசாரணைக்கு வந்தது.. நீதிபதிகள் AR மசூதி, AK ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காதலர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "தம்பதி இருவருமே கல்யாண வயதை எட்டியவர்கள் என்பதால் இணைந்து வாழ உரிமை உண்டு என்றும், பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரை ரத்து செய்ய வேண்டும் என்றும்" வாதிட்டனர்.
அப்போது பெண்ணின் பெற்றோர் தரப்பில், "முகமது சதாப்கானுக்கு ஏற்கனவே பரிதா கட்டூன் என்பவருடன் திருமணம் நடந்து, அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது" என்று கோர்ட்டில் சொன்னார்கள்.
வாதங்கள்: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "இஸ்லாமியர் ஒருவர் திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் வாழ்ந்து வரும்போது, இன்னொரு பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க இஸ்லாம் மதத்தின் கீழ் அனுமதி கிடையாது..
விவாகரத்து பெற்ற பிறகு வேண்டுமானால், இன்னொரு பெண்ணுடன் இணைந்து வாழலாம்.. அதில் தவறில்லை. ஆனால் இந்த விவகாரம் அரசியலமைப்பு மற்றும் சமூக அறநெறி மற்றும் நெறிமுறைகளின் சமநிலையை சிதைத்து விடும்... சமுதாயத்தில் அமைதி மற்றும் அமைதிக்கு தேவையான சமூக ஒற்றுமைகள் மங்கி மறைந்து விடும் என்று கூறிய நீதிபதிகள், சினேகாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications