ஒரு விரல் புரட்சி! 60.. 180 என நூலிழையில் வென்ற வேட்பாளர்கள்.. இமாச்சலில் காங்கிரஸ் வென்றது எப்படி?
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், பல வேட்பாளர்கள் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எதிரணியினரை வீழ்த்தியுள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் 2017-2022 வரை பாஜக ஆட்சியில் இருந்தது. இந்நிலையில் நவம்பர் 12ம் தேதி 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் 8ம் தேதியான நேற்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதல் பாஜகவும், காங்கிரசும் மாறி மாறி முன்னிலையில் வந்த நிலையில் இறுதியில் காங்கிரஸ் 40 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது.

நூலிழையில் தப்பிய வேட்பாளர்கள்
ஆனால், இரு தரப்பிலும் குறிப்பிட்ட சில வேட்டபாளர்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக போரஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ்குமார் வெறும் 60 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்துள்ளார். இது தனித்தொகுதியாகும். இதில் மொத்தம் 81,134 வாக்குகள் பதிவாகி இருந்தன. காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ்குமார் 24,779 (43.16%) வாக்குகளை பெற்றார். அதேபோல பாஜக வேட்பாளர் அனில் திமான் 24,719 (43.05%) வாக்குகளை பெற்றிருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 1.1 சதவிகிதம்தான். இந்த தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பவன்குமார் 6,861 வாக்குகளும், ஆம் ஆத்மி சார்பில் களமிறங்கிய ரஜினி கவுஷல் 463 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

காங்கிரஸ்
இதேபோல பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாஸ்பூர் தொகுதியில், மொத்தம் 83,025 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் தாக்கூர் 30,712 வாக்குகளை பெற்றிருந்தார். ஆனால் பாஜக வேட்பாளரான திரிலோக் ஜம்வால் இவரை விட 267 வாக்குகள் அதிகமாக 30,988 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதே மாவட்டத்தின் மற்றொரு தொகுதியான ஸ்ரீ நைனா தேவிஜி தொகுதியில் மொத்தம் 74,244 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் பாஜகவின் ரந்தீர் சர்மா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராம்லல் தாகூரை விட 171 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து ஹமர்பூர் மாவட்டத்தின் சுஜன்பூர் தொகுதியில் மொத்தம் 73,922 வாக்குகள் பதிவாகின.

பாஜக
இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ராஜிந்தர் சிங் ரானா 399 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அதேபோல சிர்மௌர் மாவட்டத்தின் ஷில்லை தொகுதியில் மொத்தம் 74,831 வாக்கள் பதிவாகி இருந்தன. இங்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பல்தேவ் சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ஹர்ஷ்வர்தன் சவுகான் 382 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மேலும் சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் எனும் தனித் தொகுதியில் 74,838 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் தன்னை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் கவுல் சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் நந்த் லால் 567 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

இதர தொகுதிகள்
இதேபோல தரங், பால், ஜஸ்வான்-பிரக்பூர், லாஹவுல் மற்றும் ஸ்பிதி, நஹான் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக காங்கிரஸையும், காங்கிரஸ் பாஜகவையும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 12 மாவட்டங்களில் 388 ஆண்களும், 24 பெண்களும் என மொத்தம் 412 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கினர். 7,881 வாக்கு சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் இருந்த 55,92,828 வாக்காளர்களில் 76.44% பேர் வாக்களித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 0.87% அதிகரித்திருக்கிறது. வழக்கமாக இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஒருமுறையும், பாஜக ஒருமுறையும் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் இம்முறை காங்கிரஸ் 43.90% வாக்குகள் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக 43% வாக்குகள் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications