For Daily Alerts
Just In
ஹெலிகாப்டர் ஊழல்: மூன்று அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

நாட்டின் வி.வி.ஐ.பிகளுக்கான ஹெலிகாப்டர்களை இத்தாலியில் இருந்து வாங்கியதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்தும் செய்தது.
அண்மையில் இத்தாலி சென்றிருந்த சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, அந்நாட்டுக்கான இந்திய தூதருடன் இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலர்கள் குப்தா, சுதிர்குமார், மேகலாயாவின் ஓய்வு பெற்ற டிஜிபியான என். ராமச்சந்திரன் ஆகியோரிடமும் ஹெலிகாப்டர் ஊழல் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
இவர்கள் 2004-2005ஆம் ஆண்டு காலத்தில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பொறுப்பு வகித்த அதிகாரிகள் என்பதால் சிபிஐ இவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.