மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய கலவரம் .. இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்தது சிபிஐ
கொல்கத்தா : இந்த மாத தொடக்கத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை அடுத்து, மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக ஒன்பது வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாகியது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மே 2 ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்குப் பிறகு மிகப்பெரிய அரசியல் வன்முறை ஏற்பட்டது. கொலை,, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது. இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் . மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் போது பெண்களுக்கு எதிரான கொலைகள், பலாத்காரம் மற்றும் குற்றங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கொலை, பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறையின் போது பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பான வழக்குகளின் விவரங்களை மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குனருக்கு சிபிஐ கடிதம் அனுப்பி இருந்தது.
அத்துடன் மேற்கு வங்கத்தின் அரசியல் வன்முறையை விசாரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலா 4 குழுக்களை இணை இயக்குநர்கள் ராம்நிஷ், அனுராக், வினீத் விநாயக் மற்றும் சம்பத் மீனா தலைமையில் அமைத்து இருந்தது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு துணை ஆய்வாளர் ஜெனரல் மற்றும் சுமார் நான்கு காவல்துறை கண்காணிப்பாளர்கள் இருப்பார்கள் என்றும் ஒட்டுமொத்த விசாரணையை கூடுதல் இயக்குனர் அஜய் பட்னாகர் கண்காணிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக ஒன்பது வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள் பதிவு செய்யப்படுவதாகவும், மாநில காவல்துறை அளித்த தகவலின் அடிப்படையில், அதிக வழக்குகள் உரிய நேரத்தில் பதிவு செய்யப்படும் என்றும் சிபிஐ அதிகாரி ஒருவர் கூறினார். இதனிடையே ஆறு வாரங்களுக்குள் வழக்குகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications