லாலு பிரசாத் யாதவிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்.. கைதாக வாய்ப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.

ரயில்வே ஹோட்டல்களை தனியாருக்கு வழங்கியதில் நடந்த முறைகேட்டில் முன்னாள் ரயில்வே அமைச்சரான லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புள்ளதாக சிபிஐ அவரது வீட்டில் சோதனைகளை நடத்தியிருந்தது.

CBI set to grill Lalu Yadav and family

இந்த நிலையில் அடுத்த வாரம் லாலு பிரசாத் யாதவிடம் நேரடியாக விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. 5 அதிகாரிகள் குழு டெல்லியிலிருந்து பாட்னா விரைய உள்ளதாம். தற்போது வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் லாலுவ ைகைது செய்யவாய்ப்பில்லை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 5ம் தேதி லாலு மற்றும் அவரது குடும்பத்தார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி (பீகார் துணை முதல்வர்) ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
There is more trouble for Lalu Prasad Yadav as a team of the Central Bureau of Investigation will grill him next week. A team is set to leave for Patna and will question him for the alleged in awarding tenders for development, maintenance and operation of railway hotels at Ranchi and Puri to a private company.
Please Wait while comments are loading...