For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவல் துறையில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு: மாநிலங்களுக்கு ராஜ்நாத் சிங் கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையில் 33 சதவீதம் என்ற அளவில் பெண் போலீசாரை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்று இந்திய பெண் பத்திரிகையாளர்கள் அமைப்பின் நிறுவன நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

Centre asks states to recruit 33% women in police forces

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. இப்போதைய சூழலில், துணை ராணுவப் படைகளில் 1.99 சதவீதம் மட்டுமே பெண்கள் பணிபுரிகின்றனர்.இந்த அளவினை 10 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அனைத்து மாநிலங்களின் காவல்துறையிலும், மத்திய ஆயுதப்படைப் பிரிவிலும் 33 சதவீதம் அளவில் பெண் போலீசாரை நியமிக்க வேண்டும்.இதுதொடர்பான அறிவிக்கை, கடிதம் வாயிலாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது' என இவ்வாறு அப்போது அவர் தெரிவித்தார்.

English summary
Rajnath Singh says there are only 1.99% women in the paramilitary forces and we want to increase it in the next 10 years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X