For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் உள்பட மொத்த தென் இந்தியாவும் வறட்சியால் பாதிப்பு.. அறிவித்தது மத்திய அரசு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மொத்த தென் இந்தியாவும் வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களோடு, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Centre declares Tamilnadu drought-hit

இந்த மாநிலங்களுக்கு தலா ரூ.24000 கோடியை வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் இம்மாநில மக்களுக்கு கூடுதல் நாட்கள் பணி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதாவது இந்த மாநிலங்களுக்கு, ஊரக வேலைவாய்ப்பு திட்ட நாட்களை 150 என அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் முதல் ஜுன் மாதத்திற்குள் வறட்சி பாதித்த 8 மாநிலங்களுக்கு ரூ.24 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

போர்வெல் தோண்டுவது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்த நிதியை பயன்படுத்த முடியும்.

English summary
The Centre on Thursday declared eight states including Tamilandu, karnataka as drought-hit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X