என் சடலத்தை தாண்டிதான் குடியுரிமை சட்ட திருத்தத்தை மே.வங்கத்தில் அமல்படுத்த முடியும்: மமதா ஆவேசம்
Recommended Video
கொல்கத்தா: தாம் உயிருடன் இருக்கும்வரை மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தவிடமாட்டேன் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கொல்கத்தாவில் மிக பிரமாண்ட பேரணியை இன்று மமதா பானர்ஜி நடத்தினார். இப்பேரணியில் மமதா பானர்ஜி பேசியதாவது:

நான் உயிருடன் இருக்கும் வரை குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தமாட்டோம். அவர்கள் விரும்பினால் என் அரசை கலைக்கட்டும்.
நாங்கள் ஒருபோதும் சரணடையமாட்டோம். என்னுடைய சடலத்தை தாண்டிதான் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு அவர்களால் இங்கே அமல்படுத்த முடியும்.
தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்த போது தனித்து இருந்தோம். இப்போது பிற மாநில முதல்வர்களும் இதனை பேசுகின்றனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் இதை அமல்படுத்தமாட்டோம் என்கிறார். பீகார் முதல்வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை அமல்படுத்தமட்டோம் என்கிறார். குடியுரிமை சட்ட திருத்தத்தையும் நீங்கள் அமல்படுத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
மத்திய பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர், கேரளா முதல்வர்களும் இப்போது குடியுரிமை சட்ட திருத்ததை ஏற்க முடியாது என கூறிவிட்டனர். இந்தியா என்பது அனைவருக்குமானது.
குடியுரிமை சட்ட திருத்தம் யாருக்கானது? இங்கே நாம் அனைவருமே குடிமக்கள்தான். இந்த இரண்டையும் திரும்பப் பெறும்வரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு மமதா பானர்ஜி பேசினார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications