தே.ஜனநாயக கூட்டணிக்கு திரும்புகிறது தெலுங்கு தேசம்! ராஜ்நாத்தை சந்திக்கிறார் சந்திரபாபு!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Chandrababu Naidu to meet Rajnath in Delhi; is TDP returning to NDA?
டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. பின்னர் அதில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் இன்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் ராஜ்நாத்தை சந்தித்துப் பேச இருக்கிறார்.

இந்த சந்திப்பின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்கிறது பாஜக வட்டாரங்கள். ஆனால் தெலுங்கு தேசம் கட்சியினரோ, தெலுங்கானா விவகாரம் தொடர்பாக மட்டுமே பாஜக தலைவர் ராஜ்நாத்தை சந்திரபாபு சந்திக்க இருக்கிறார் என்று கூறுகின்றனர்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தால் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Is the TDP returning to the NDA after 10 years? The signals from the TDP camp are hinting at a possible pre-poll alliance with the BJP ahead of coming Lok Sabha elections. TDP chief N Chandrababu Naidu will meet BJP chief Rajnath Singh in New Delhi on Saturday.
Please Wait while comments are loading...