For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழங்குடி இனத்தில் இருந்து ஒரு வரலாறு.. சாதனை படைத்த சந்திராணி முர்மு!

Google Oneindia Tamil News

டெல்லி: பழங்குடி இனத்தில் இருந்து 25 வயது பெண் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திராணி முர்மு. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், புவனேஸ்வரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பி டெக் முடித்திருந்தாலும் சந்திராணி சமூக சேவை செய்து வருகிறார்.

இவர் வசிக்கும் பகுதியில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு தேவை என்றால் சந்திராணியை தேடி வருகிறார்கள். இவரும் தன்னை தேடி வருபவர்களின் தேவை அறிந்து உதவி செய்து வருகிறார். உதவி செய்வதற்கு இவர் மறுப்பதும் இல்லை. இவரது தந்தை சஞ்சீவும் சமூக சேவை செய்து வருகிறார்.

ஞான் இப்போ பாட்டு பாடும்.. நீங்க எனக்கு ஓட்டுப் போடணும்.. கில்லி மாதிரி ஜெயித்த ரம்யா! ஞான் இப்போ பாட்டு பாடும்.. நீங்க எனக்கு ஓட்டுப் போடணும்.. கில்லி மாதிரி ஜெயித்த ரம்யா!

சந்திராணியின் சேவை

சந்திராணியின் சேவை

அரசுப் பணியில் இருந்து ஒய்வு பெற்ற சஞ்சீவ் தனது பகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறார். இதனைக் கண்டே சந்திராணியும் சமூக சேவை செய்து வருகிறார்.

விருப்ப மனு

விருப்ப மனு

இந்த நிலையில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இவரை தேர்தலில் போட்டியிட சொல்லி சந்திரானியின் மாமா ஹர்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதை ஒத்துக்கொண்ட சந்திராணியும் பிஜூ ஜனதா தளம் கட்சியில் கியோஞ்சர் தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தார்.

பழங்குடியினர் மக்கள் அதிகம்

பழங்குடியினர் மக்கள் அதிகம்

தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதி வறுமையில் வாடும் மக்கள் வசிக்கும் வளமான பூமி என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள இரும்பு தாதுக்களில் 20% இந்த தொகுதியில் உள்ளது. ஆனாலும் இங்குள்ள மக்கள் மிகவும் வறுமையில் உள்ளனர்.

எம்பியாக இருந்த தாத்தா

எம்பியாக இருந்த தாத்தா

இந்த தொகுதியில் இவரது தாய் வழி பாட்டனார் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். நம்பிக்கையில்லாமலே விருப்ப மனு தாக்கல் செய்த சந்திராணிக்கு ஓடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அழைத்து வாய்ப்பு கொடுத்துள்ளார். கியோன்ஜர் தொகுதியில் இவரை எதிர்த்து இருமுறை மக்களவை உறுப்பினராக இருந்த பாஜகவை சேர்ந்த ஆனந்த் நாயக் என்பவர் போட்டியிட்டுள்ளார்.

இளம் வயது சாதனை

இளம் வயது சாதனை

இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தபோது சந்திராணி குறித்து போட்டோஷாப் செய்யப்பட படங்கள் இவரை விமர்சித்து வலம்வந்துள்ளது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடுமையாக பிரச்சாரம் செய்தவர் இப்போது வென்று காட்டியுள்ளார். 25 வயது 11 வருடங்கள் நிரம்பிய இவர் மிக இளவயது எம்.பி. என்ற பெருமையைப் பெறுகிறார்.

எம்.பி யாக பதவி ஏற்றபின் தனது தொகுதி மக்களின் வறுமையைப் போக்குவதே தனது இலட்சியம் என்று கூறுகிறார் இந்த இளம் எம்.பி. வாழ்த்துகள் தோழியே!

English summary
Odisha's Chandrani Murmu has registered a new record as she is the youngest ever MP to enter into the Loksabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X