For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாக்டவுனால் சத்தீஸ்கர் திரும்பிய கர்ப்பிணி.. நடுவழியில் பிரசவம்- ஆண் சிசுவை சாலையில் கைவிட்ட துயரம்

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: லாக்டவுனால் ஒடிஷாவில் இருந்துசொந்த மாநிலமாக சத்தீஸ்கருக்கு திரும்பிய கர்ப்பிணிக்கு நடுவழியில் பிரசவம் ஏற்பட்டது. அப்போது பிறந்த ஆண்சிசுவை நடுவழியிலேயே அந்த பெண் கைவிட்டு குடும்பத்தினருடன் சென்ற துயரம் நிகழ்ந்துள்ளது.

கொரோனாவை தடுக்க 4-வது கட்ட லாக்டவுன் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. லாக்டவுன் கட்டுப்பாடுகளால் பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்துயரத்தின் பிடியில் சிக்கி இருக்கின்றனர்,

Chattisgarh Migrant Woman Worker Leaves Behind with New Born In Odisha

இதனால் பிழைத்தால் போதும் என சொந்த மாநிலங்களை நோக்கி நடைபயணமாகவே பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு நடந்தும் செல்கின்றனர். இப்படி நடந்து செல்லும் வழியில் விபத்துகளில் சிக்கி மாண்டவர்கள் ஏராளம்.

சைக்கிள்களில், டிரக்குகளில் பயணித்து நடுவழியில் இடம்பெயர் தொழிலாளர்கள் விபத்தில் சிக்குவது தொடர் நிகழ்வாகி வருகிறது. இந்த நிலையில் ஒடிஷாவின் ரூர்கேலா அருகே ஒரு துயரம் நிகழ்ந்துள்ளது. ஒடிஷாவில் பணிபுரிந்த சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனர்.

ஓவர் நெருக்கம்.. கல்யாணம் செஞ்சு வச்சு பிரிச்சிருவாங்களோ.. பயந்து போன தோழிகள்.. ஒரே சேலையில்!ஓவர் நெருக்கம்.. கல்யாணம் செஞ்சு வச்சு பிரிச்சிருவாங்களோ.. பயந்து போன தோழிகள்.. ஒரே சேலையில்!

அப்போது ரூர்கேலா அருகே ஒரு பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டிருக்கிறது. இதில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் சிசுவை சாலையோரமாக கிடத்தி விட்டு அந்த பெண், குடும்பத்தினருடன் சத்தீஸ்கர் திரும்பிவிட்டார். இதுபற்றி அப்பகுதி மக்கள் அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.

குழந்தைகள் நலப் பிரிவினர் விரைந்து சென்று சிசுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

English summary
A Chattisgarh Migrant Woman Worker Left Behind with New Born In Odisha's Rourkela.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X