நீதிபதிகள் புகார் எதிரொலி.. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு தீபக் மிஸ்ரா திடீர் அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரி இல்லை... உச்சநீதிமன்ற நீதிபதிகள்- வீடியோ

  டெல்லி: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அழைப்பு விடுத்துள்ளார்.

  சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகள் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர். நாட்டிலேயே முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த நீதிபதிகள் தலைமை நீதிபதி மீது குற்றம்சாட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Chief justice of India Deepak misra calls Attorney general on the co judges allegation

  சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி நீதித்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ஆலோசித்து வருகிறார்.

  இதனிடையே மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திடீர் அழைப்பு விடுத்துள்ளார். சக நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் தலைமை நீதிபதி அட்டார்னி ஜென்ரலுக்கு அழைப்பு விடுத்திருப்பது எதற்காக என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chief justice of India Dipak Misra called Attorney General on the issue of Judges' allegation against him. Prime minister Modi also discussded with law minister Ravi shankar Prasad.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற