For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடையில் இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்த சீனாவுக்கு.. குளிர்காலத்தில் வந்த பெரும் சிக்கல்!

Google Oneindia Tamil News

லடாக்: இமயமலையில் மிக மோசமான குளிர்காலம் தொடங்கி உள்ள இந்த சூழலிலும் இரு நாட்டு படைகளும் முகாமிட உள்ளன. இதன் மூலம் எல்லையில் பல ஆண்டுகளாக நீடித்த மோதலின் விளைவு தெளிவாக தெரிகிறது. இந்தியா அங்கு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதால், சீனாவும் ரோந்து பணியில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,.

முன்னதாக இமயமலையில் கோடைக்காலத்தில் அதாவது ஜூன் மாதத்தில், லடாக்கில் உள்ள பங்காங் திசோ ஏரிப்பகுதியில் சுமார் 300 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துக்கொண்டது. மன்ஹாட்டனை விட ஐந்து மடங்கு பெரிய அளவில் உள்ள அந்த பகுதியில் இந்திய வீரர்கள் இப்போது ரோந்து செல்வதை சீன வீரர்கள் தடுக்கிறார்கள்.

உறைபனி எப்போதும் நிலவும் மிக உயரமான லடாக் மலை சிகரங்கள் கடந்த ஆறுமாதங்களாக மழை மேகங்களை காட்டிலும், போர்மேகம் சூழ்ந்து காணப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவும் சீனாவும் இப்பகுதியில் போரை நடத்திய பின்னர். மீணடும் கடந்த ஆறு மாதங்களாக பதட்டங்களை மலையின் உயரத்தை போல் உச்சத்தில் வைத்திருக்கின்றன.

ரவுண்டு 8... இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சு.. நவம்பர் 6ல்!ரவுண்டு 8... இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சு.. நவம்பர் 6ல்!

மைனஸ் 40 டிகிரி

மைனஸ் 40 டிகிரி

இந்தியா சீனா என இரு படைகளும் குளிர்கால மாதங்களில் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய நிலப்பகுதிகளில் குடியேறுவது இல்லை தங்கள் நிலத்தை காப்பாற்றிக்கொள்வதற்காக அவை படைகளை நிலைநிறுத்த தயாராகி வருகின்றன, இதில் கொடுமை என்னவென்றால் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே மைனஸ் 40 டிகிரி வரை குறையக்கூடும். அப்படிப்பட்ட உறைபனியில் பாதுகாப்பு பணியில் இரு படைகளும் ஈடுபட போகின்றன,.

இதுவரை இல்லாத ஒன்று

இதுவரை இல்லாத ஒன்று

முன்னாள் வடக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா (இமயமலை முழுவதும் இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையில் 18,176 அடி (5,540 அடி) உயரத்தில் செல்லும் ஒரு பகுதிக்கு பொறுப்பு வகித்தவர்). இதுபற்றி கூறுகையில், "1962 போருக்குப் பின்னர் குளிர்காலத்தில் இந்த அளவுக்கு படைகளை இருநாடுகளும் குவிக்கப்போவதை இதுவரை நாங்கள் பார்க்காத ஒன்று, இதற்காக இரு நாடுகளும் மிக ஆழமான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றன. "அணுகுமுறைகள் கடினமடைகின்றன, இதன் மூலம் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நீண்ட கால பதட்டங்களை நாம் பார்க்க போகிறோம்.

போருக்கு பின் மாற்றம்

போருக்கு பின் மாற்றம்

இரு நாடுகளையும் பிரிக்கும் தற்போதைய "உண்மையான கட்டுப்பாட்டு எல்லை கோடு" 1914 இல் திபெத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆங்கிலேயர்களால் வரையப்பட்ட எல்லைகளை ஓரளவு பின்பற்றுகிறது. 1959 ஆம் ஆண்டில் திபெத்தில் சீன ஆட்சிக்கு எதிரான எழுச்சியைத் தொடர்ந்து இந்தியா தலாய் லாமா தஞ்சம் வழங்கிய பின்னர் மோதல்கள் உருவானது., இதுவே விரைவில் போருக்கும் வழிவகுத்தது. அதன் பின்னர் அவ்வப்போது ஐந்து ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆனால் அவை எதுவுமே இப்போதைய மோதல்களைத் தடுக்கத் தவறிவிட்டன" என்றார்.

பட்டு வழித்தடம்

பட்டு வழித்தடம்

இந்தியாவிலிருந்து சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்திற்கு செல்லும் கரகோரம் பாஸ் போன்ற பகுதிகளில் இரு தரப்பினருக்கும் ஆபத்துகள் உள்ளன, சீனா உருவாக்கி வரும் பட்டு வழித்தடச் சாலை வழித்தடம் இங்குதான் உளளது. நீண்டகால நட்பு நாடான பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கு இடையே எளிதாக சாலை வசதியை கொடுக்கும் பகுதியாகும். அதிபர் ஜி ஜின்பிங் , மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்த உருவாக்கி வரும் பட்டு வழித்தடத்தை உருவாக்கி வருகிறார்.

சாலை உருவாக்கியது

சாலை உருவாக்கியது

1962ல் போருக்குப் பின்னர் பல ஆண்டுகளாக இந்தியா எல்லைப் பகுதியில் சிறிய அளவிலேய உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் சமீபத்தில் புதிய உள்கட்டமைப்பை பெரிய அளவில் மேம்படுத்தத் தொடங்கியது. படைகளை நகர்த்துவதற்காக இமயமலையின் முக்கிய பகுதிகளில் ஏழு சுரங்கங்களில் முதல் ஒன்றை இந்தியா சமீபத்தில் திறந்தது, மேலும் காஷ்மீரின் முக்கிய பிராந்திய நகரமான லோவை கரகோரம் பாஸுடன் இணைக்கும் 255 கிலோமீட்டர் சாலையையும் அண்மையில் திறந்தது. விமானநிலையங்களும் புதுப்பிக்கப்பட்டன.

குளிர் மோசமான அச்சுறுத்தல்

குளிர் மோசமான அச்சுறுத்தல்

இதனால் கோபம் அடைந்த சீனா அத்துமீறலில் ஈடுபட்டது. அத்துடன் இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளே "பதட்டங்களுக்கு மூல காரணம்" என்று பொய் கூறியது. அத்துடன் கல்வான் மோதலில் இந்தியாவைப் போல் வீரர்கள் இறப்பு பற்றி எந்த தகவலையும் சீனா வெளியிவில்லை. சீனா எல்லை விவகாரத்தில் அவ்வப்பபோது இந்தியாவை விமர்சித்தாலும், அதன் செயல்பாடுகளில் மர்மமே உள்ளது. குளிர்காலம் தொடங்கி உள்ள நிலையில் லடாக் பகுதியில் இந்தியா பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கி உள்ளதால், சீனாவும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இருவருக்குமே ஒருவருக்கு ஒருவர் அச்சுறுத்தல் என்றால் இருவருக்குமே குளிர் மோசமான அச்சுறுத்தலாகும்.

English summary
As troops in the Himalayas hunker down for the brutal winter, the outcome of the worst clashes in decades is becoming clear: China has pushed further into territory once patrolled exclusively by India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X