For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லடாக்கில் 5 இந்தியர்களை ஊடுருவி கைது செய்த சீனா!

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்தியர்கள் 5 பேரை அத்துமீறி ஊடுருவி வந்து சீனப் படையினர் பிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லடாக்கின் சுமர் பகுதியில் இந்தியர்கள் 5 பேர், தங்களது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்தியப் பகுதிக்குள் பல கிலோ மீட்டர் தூரம் சீனப் படையினர் ஊடுருவி வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த இந்தியர்கள் 5 பேரையும், அவர்களின் கால்நடைகளையும் தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள முகாமுக்கு பிடித்துச் சென்றனர்.

இதுபற்றிய தகவலின்பேரில் 5 பேரையும் விடுவிக்க இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க கொடி அமர்வுக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், இந்தப் பிரச்னை உயர்நிலை அளவில் எடுத்து செல்லப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தாங்கள் பிடித்துச் சென்ற இந்தியர்கள் 5 பேரையும் சீனப் படையினர் விடுவித்து விட்டனர். சீனாவில் கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மன்மோகன்சிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இரு நாடுகள் இடையேயும் எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தநிலையில் இந்தியர்களை சீனப் படையினர் பிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Chinese troops apprehended five Indian nationals in Chumar area of Ladakh well inside the Indian territory and took them to their side of the border, in perhaps the first such incident along the Line of Actual Control.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X