For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனா உறவு கொண்டாடினாலும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவுடையது தான்: சுஜாதா சிங்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: சீனா அருணாச்சல பிரதேசம் தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறுவதால் அது இந்திய மாநிலங்களுள் ஒன்று என்ற உண்மை மாறப் போவது இல்லை என்று வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய மாநிலங்களுள் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறி சீனா அவ்வப்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது. அது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று கூறுகிறது சீனா.

இந்நிலையில் சீனா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வரைபடத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேசம்

இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசமும், சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியும் தங்கள் நாட்டில் உள்ளது என்று அந்த வரைபடத்தில் தெரிவித்துள்ளது சீனா.

ஹமீது அன்சாரி

ஹமீது அன்சாரி

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த சீனா சென்றுள்ள நிலையில் அந்நாடு இந்த சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பகுதியே

இந்தியாவின் பகுதியே

சீனா அருணாச்சல பிரதேசம் தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறுவதால் அது இந்திாய மாநிலங்களுள் ஒன்று என்ற உண்மை மாறப் போவது இல்லை என்று வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார்.

அமைதி

அமைதி

சீன தலைவர்களுடன் பேசுகையில் நமது முக்கிய விஷயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்தியா-சீனா எல்லையில் அமைதியை காப்பது முக்கியம் என்று இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர் என்றார் சுஜாதா சிங்.

English summary
Foreign secretary Sujatha Singh told that though China claims Arunachal Pradesh as its place, cartographic depiction doesn't change facts on the ground.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X