For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபரேஷன் DBO.. மிக முக்கிய இடத்திற்கு குறி வைக்கும் சீனா.. லடாக்கில் புதிய டிவிஸ்ட்.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

லடாக்: லடாக்கில் இருக்கும் முக்கியமான சில கட்டுப்பாட்டு பகுதிகள் மீது சீனா தற்போது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. சீனாவின் படைகள் புதிய இடங்களில் குவிக்கப்பட்டு உள்ளது.

Recommended Video

    எல்லையில் பறந்த போர் விமானங்கள்.... Ladakh-ல் இரவு நடந்தது என்ன?

    இந்தியா சீனா இடையே எல்லையில் மூன்று இடங்களில்தான் அதிகமான மோதல் இருந்து வருகிறது. கல்வான் பகுதி, ஹாட் ஸ்பிரிங்ஸ், பாங்காங் திசோ. ஆனால் தற்போது நான்காவதாக இன்னொரு இடம் மீது சீனா கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

    அதன்படி டெப்சாங் மலை பகுதி என்று கூறப்படும் Depsang plains பகுதிக்கு மிக அருகே சீனா படைகளை குவித்து வருகிறது. மாபெரும் திட்டங்களை மனதில் வைத்து இங்கு சீனா படைகளை குவிக்க தொடங்கி உள்ளது.

    சண்டை நடந்த அதே இடம்.. பெரிய திட்டம் போடும் சீனா.. படைகள் குவிப்பு.. காட்டிக்கொடுத்த சாட்டிலைட்! சண்டை நடந்த அதே இடம்.. பெரிய திட்டம் போடும் சீனா.. படைகள் குவிப்பு.. காட்டிக்கொடுத்த சாட்டிலைட்!

    அது என்ன இடம்

    அது என்ன இடம்

    இந்தியாவின் கடைக்கோடி வடக்கு பகுதியில் இருக்கும் மலைபகுதிதான் டெப்சாங் பகுதியாகும். இங்குதான் இந்தியாவின் விமானப்படை தலமான Daulat Beg Oldie இருக்கிறது. இதைதான் DBO என்று அழைப்பார்கள். லடாக் கீழே இந்த பகுதி வருகிறது. இங்குதான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் விமானப்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு இந்த படைத்தளம் மிக முக்கியம் ஆகும்.

    எந்த இடம்

    எந்த இடம்

    இந்த DBO விமானப்படைத்தளம்தான் இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் எப்போதும் நாம் வெற்றிபெற மிக முக்கிய காரணமாக இருந்தது. 1962ல் கட்டப்பட்ட இந்த படைத்தளம் போல உலகில் எங்குமே படைத்தளம் இல்லை. ஆனால் நிர்வாக காரணங்களால் இதை 2008ல் பயன்படுத்தாமல் இந்தியா நிறுத்தியது. ஆனால் மீண்டும் தற்போது 2013க்கு பின் இது புதுப்பிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பெரிய அளவில் படைகளும் குவிக்கப்பட்டுள்ளது.

    அரண் போல இருக்கிறது

    அரண் போல இருக்கிறது

    இந்த உயரமான விமானப்படைத்தளம் நமக்கு அரண் போல பாதுகாப்பு அளிக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் பகுதிக்கு கீழ் வரும் இந்த விமானப்படை தளத்தை சாலைகள் மூலம் இந்தியா இணைக்கிறது. இதற்காக Darbuk-Shyokh-Daulat Beg Oldie பகுதிகளுக்கு இடையே பெரிய அளவில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. DSDBO எனப்படும் இந்த சாலை திட்டம் 255 கிமீ தூரம் கொண்டது ஆகும்.

    இந்தியா வசதி

    இந்தியா வசதி

    இந்த சாலை அமைக்கப்பட்டால் லடாக்கில் மிக எளிதாக பாதுகாப்பு பணிகளை செய்யலாம். படைகளை குவிக்கலாம். இந்தியா மீது DSDBO சாலைக்கு பின் யாரும் கை வைக்க முடியாது. 16000 அடி உயரம் கொண்ட மலைகள் வழியே கூட இந்த சாலை செல்கிறது. லடாக்கில் மொத்த எல்லை முழுக்க இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது.தற்போது இதைத்தான் மொத்தமாக தடுக்க சீனா முயன்று வருகிறது. இந்த சாலை மீதுதான் சீனா குறி வைத்துள்ளது.

    சீனாவின் திட்டம் என்ன

    சீனாவின் திட்டம் என்ன

    அதன்படி விமானப்படை தலமான Daulat Beg Oldie இருக்கும் டெப்சாங் பகுதிக்கு அருகே சீனா தனது படைகளை குவித்து வருகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் DBO விமானப்படை தளத்தில் இருந்து வெறும் 23 கிமீ தூரத்தில் சீனா புதிய கேம்பை அமைத்து உள்ளது. அதேபோல் டெப்சாங்கில் இருக்கும் இந்திய படைத்தள பகுதியில் இருந்து 21 கிமீ தூரத்தில் சீனா இன்னொரு படைத்தளத்தை அமைத்து இருக்கிறது. இதெல்லாம் இரண்டு நாட்களில் நடந்த மாற்றங்கள்.

    அதிக அளவில் படைகள்

    அதிக அளவில் படைகள்

    இங்கே சீனா பெரிய அளவில் படைகளை களமிறக்கி உள்ளது. அதேபோல் அங்கு நவீன ஆயுதங்களையும் இறக்கி உள்ளது. ஒரு பக்கம் கல்வான் பகுதியில் படைகளை களமிறக்கிவிட்ட தற்போது இங்கே புதிய துருப்புகளை சீனா களமிறக்கி உள்ளது. டெப்சாங் பகுதியில் எல்லை என்று கூறப்படும் Y-junction பகுதியில்தான் சீனா அதிகமாக படைகளை குவித்து இருக்கிறது. இதனால் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த இடத்திற்கு சீனா குறி வைக்க நிறைய காரணங்கள் இருக்கிறது.

    1. இந்தியாவின் DSDBO சாலை பணிகளை தடுக்கலாம்.

    2. போர் வந்தால் DBO விமான படைத்தளத்தை எப்படியாவது கைப்பற்றலாம் என்று சீனா நினைக்கிறது.

    3. டெப்சாங் பகுதியை கைப்பற்றினால் லடாக்கில் எளிதாக நுழையலாம்.

    4. போர் வந்தால் அது பெரிதும் விமானப்படை தொடர்பானதாக இருக்கும் என்பதால், இந்த DBO பகுதியை கைப்பற்ற வேண்டிய திட்டத்தில் சீனா இருக்கிறது.

    ஆனால் என்ன நடந்தாலும் இந்தியா இந்த பகுதியில் சீனாவை அத்துமீற அனுமதிக்காது. அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள்.

    English summary
    China standoff with India: PLA all set to focus on Daulat Beg Oldie, The reason behind it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X