அடேங்கப்பா.. பாஜக தலைவருக்கு 7 விநாடிகளில் 5 முறை கும்பிடு போட்ட கலெக்டர்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பாஜக தலைவருக்கு பார்மேர் மாவட்டத்தின் ஆட்சியராக உள்ள டினா தாபி, 7 விநாடிகளில் 5 முறை குனிந்து வணக்கம் வைத்துள்ள வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
பாஜக தலைவர்கள், அரசின் ஆட்சி அதிகாரத்தில் அதிகம் தலையிடுகிறார்கள் என்பது பரவலான குற்றச்சாட்டு. பாஜக மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாநிலத்திலும், ஆளும் கட்சியின் தலைவர்கள் மீது இந்த குற்றச்சாட்டு இருக்கிறது. இருப்பினும், பாஜக மீது கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது. இதனை அக்கட்சி மறுத்து வந்தாலும், இதற்கு ஆதாரமாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வந்திருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது புது வீடியோ வெளியாகியுள்ளது.

வீடியோவில் ராஜஸ்தான் மாநிலத்தின் பாஜக முன்னாள் தலைவரான சதீஷ் பூணியாவுக்கு, பார்மேர் மாவட்டத்தின் ஆட்சியராக உள்ள டினா தாபி 7 விநாடிகளில் 5 முறை குனிந்து வணக்கம் வைத்துள்ளது தெரிய வந்திருக்கிறது.
வரிசையாக வெள்ளை நிறத்தில் எஸ்யூவி கார் ஒன்று பார்மேர் மாவட்டத்திற்கு வந்திருக்கிறது. அதில், சதீஷ் வந்து இறங்குகிறார். கையில் செல்போனை பார்த்துக்கொண்டே நடந்து வருகிறார். அவருக்கு ஆட்சியர் டினா தாபி முதலில் வணக்கம் வைத்திருக்கிறார், ஆனால் சதீஷ் கவனிக்கவில்லை. எனவே மீண்டும் வணக்கம் வைக்கிறார்.. இந்த முறையும் கவனிக்கவில்லை. இப்படியாக 4 முறை வணக்கம் வைத்த பின்னர் 5வது முறையாக வைக்கப்பட்ட வணக்கத்தையே சதீஷ் கவனிக்கிறார்.
This is Tina Dabi who once topped the Civil services exams, got AIR 1.
— Roshan Rai (@RoshanKrRaii) October 26, 2024
Gave lectures on how IAS should be for the people not politicians in seminars.
Today, she is seen bowing down 7 times in 5 seconds in front of a BJP leader who isn't even an MLA.
What a fall for this… pic.twitter.com/7iJ3YbZCZx
பின்னர் நன்றி கூறி டினா தாபி குறித்து பேசிய சதீஷ், "கலெக்டர் நன்றாக வேலை செய்கிறார். நகரின் தூய்மைக்காக சிறப்பாக பாடுபடுகிறார். அனைத்து இடங்களிலும் குப்பைத்தொட்டிகளை நிறுவுகிறார். நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள். பார்மேரை இந்தூர் போல துய்மையாக மாற்றிவிடுவீர்கள் போல.." என புகழ்ந்து பேசுகிறார். இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் பாஜக தலைவர்களின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாநில தலைவர் கூட கிடையாது. முன்னாள் தலைவர். அவருக்கு எதற்கு இவ்வளவு மரியாதையும்? வரவேற்பும்? அவர் என்ன மாவட்ட ஆட்சியரை விட உயர்ந்தவரா? அல்லது மாவட்ட ஆட்சியர், பாஜக முன்னாள் தலைவருக்கு கட்டுப்பட்டவரா? என சோஷியல் மீடியாவில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியரான டினா தாபி, பார்மேர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணிகளுக்கு பெயர் பெற்றவர். அவருடைய முயற்சியால் நகரின் பல இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன. 'புதிய பார்மேர்' எனும் முழுக்கம் மூலம் மக்களுக்கும் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் என சக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த 2023ல் சக ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் கவாண்டேவை, டினா தாபி திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி?












Click it and Unblock the Notifications