மோடியின் பதவியேற்பு விழாகுக்கு பாக். பிரதமரை அழைப்பதா? காங். ஆவேசம்
டெல்லி: மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் பிரதமராக வரும் 26ம்தேதி நரேந்திரமோடி பதவியேற்கிறார். சார்க் நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் அனைவருக்கும் இதில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ்திவாரி " தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது என்று பாஜக கூறிவந்தது. தீவிரவாதமும், அழைப்பிதழ்களும் ஒன்றாக நடைபெற முடியுமா என்பதை பாஜக இப்போது விளக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மத்திய அரசுக்கு தனது பதவியேற்பு விழாவில், கலந்துகொள்ள யாரை அழைக்க வேண்டும் என முடிவெடுப்பதில் முழு சுதந்திரம் உள்ளது. ஆனால் அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணுவதற்கு மன்மோகன்சிங் எடுத்த முயற்சிகளை இதே பாஜக கடுமையாக விமர்சனம் செய்தது. தேர்தல் பிரச்சாரம் முழுவதிலுமே, பாகிஸ்தானுக்கு எதிரான முழக்கங்கள்தான் பாஜகவின் உயிர் மூச்சாக இருந்தது. மிகமோசமான வார்த்தைகளால் பிரச்சாரம் செய்தனர். இன்று அதே பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர் என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications