ஒடிசா ரயில் விபத்து: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது முதல் விபத்து வரை.. நடந்தது என்ன?
புவனேஷ்வர்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று ஒடிசா மாநிலத்தில் விபத்தில் சிக்கியது. இந்த ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 280 ஐ தாண்டியுள்ளது. இந்த ரயில் பயணம் தொடங்கியதில் இருந்து விபத்து நடந்தது வரை நடைபெற்ற நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.
சென்னை சென்ட்ரல் - கொல்கத்தாவின் ஷாலிமார் இடையே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மேற்கு வங்காளம் வரை செல்லும் இந்த ரயிலில் புலம் பெயர் தொழிலாளர்கள் உள்பட பலரும் அதிகம் பயணிப்பதுண்டு. எப்போதும் பயணிகள் கூட்டம் இந்த ரயிலில் அலை மோதும். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் நேற்று நேற்று மாலை ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது.

இந்த ரயிலில் பயணிகள் அனைவரும் தங்கள் செல்போனில் பேசிகொண்டும் அருகில் உள்ளவர்களிடம் பெசிய படியும் வேடிக்கை பார்த்தபடியும் வந்து கொண்டு இருந்தனர். இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் பெங்களூரில் கொல்கத்தா சென்ற ஒரு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது.
அந்த ரயிலின் பெட்டிகள் ரெயிலின் சில பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன. இதனால், அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், அந்த தண்டவாளத்தில் மீது மோதியது. இதில் ரயில் பெட்டிகள் உருக்குலைந்து ஒன்றன் மேன் ஒன்றாக கிடந்தன. இதில் பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைவாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 280- ஐ தாண்டியுள்ளது.
சுமார் 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள் எத்தனை பேர் என்ற விவரம் முழுமையாக கிடைக்கவில்லை. இந்த ரயில் பயணத்தை தொடங்கியதில் இருந்து விபத்தில் சிக்கும் வரை நடந்த நிகழ்வுகளை கீழே பார்ப்போம்:
* நேற்று மாலை 3.20 மணிக்கு ஷாலிமார் - சென்னை கோரமண்டல் விரைவு ரயில் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
* நேற்று மாலை 6.30 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் பாலசோர் வந்தது.
* ஒடிசா பாலசோர் ரயில் நிலையத்தில் கோர மண்டல் விரைவு ரயில் 5 நிமிடஙக்ள் நின்று புறப்பட்டது.
* பாலசோர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் பனாபனா ரயில் நிலையத்தை மாலை 6.50 மணிக்கு கடந்தது.
* 7 மணியளவில் UP Line தடத்தில் சென்ற கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானது.
* Down Line- ல் சென்ற பெங்களுர் - ஹவுரா அதிவிரைவு ரயில் கோரமண்டல் மீது மோதியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications