For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலையில் அதிகரிக்கும் கொரோனா - கட்டாய பிசிஆர் பரிசோதனை செய்ய அரசு உத்தரவு

சபரிமலையில் 299 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 51 பக்தர்கள், 245 ஊழியர்கள், இதர மூன்று பேர் என மொத்தம் 299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சபரிமலை: சபரிமலையில் பணியில் இருக்கும் அனைத்து ஊழியர்களும் கோவிட்-19 பரிசோதனை செய்துகொள்வது கட்டாயம் மாநில சுகாதார துறை அமைச்சர் சைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அனைத்து பக்தர்களும், ஊழியர்களும் டிசம்பர் 26ஆம் தேதியன்று நடைபெறும் மண்டல பூஜைக்கு பின் RT-PCR சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி முதல் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. தினசரியும் 1000 பக்தர்களும், சனி ஞாயிறு கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

Corona increasing in Sabarimala - Kerala Government orders mandatory PCR test

கோவிலில் கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பணியில் இருக்கும் ஊழியர்கள் டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜைக்கு பின் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென கேரள அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், அண்டை மாவட்டமான கோட்டயத்தில் 11 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் மாநில சுகாதார துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.

புதிய விதிமுறைப்படி, சபரிமலையில் பணியில் இருக்கும் அனைத்து ஊழியர்களும் கோவிட்-19 பரிசோதனை செய்துகொள்வது கட்டாயம் என சைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கேரள உள்ளாட்சி தேர்தல்: 6-ல் 5 மாநகராட்சிகளை வசமாக்கிய இடதுசாரிகள்! நகராட்சிகள் காங். வெற்றி கொடி!கேரள உள்ளாட்சி தேர்தல்: 6-ல் 5 மாநகராட்சிகளை வசமாக்கிய இடதுசாரிகள்! நகராட்சிகள் காங். வெற்றி கொடி!

அவரது அறிக்கையில், அனைத்து பக்தர்களும், ஊழியர்களும் டிசம்பர் 26ஆம் தேதியன்று நடைபெறும் மண்டல பூஜைக்கு பின் RT-PCR சோதனை செய்துகொள்ள வேண்டும். நிலக்கல்லில் இருக்கும் முகாமிற்கு வருவதற்கு 24 மணி நேரத்துக்கு முன் அனைவரும் கோவிட்-19 நெகடிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து பக்தர்களும் கோவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.

English summary
State Health Minister Sailaja said in a statement that all employees working in Sabarimala must undergo Govt-19 testing. The report also said that all devotees and staff should undergo RT-PCR testing after the zonal puja on December 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X