For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புரோகிதரை தரதரவென இழுத்து.. "அரெஸ்ட் பண்ணுங்க".. ஆர்டர் போட்ட கலெக்டர்.. ஆக்‌ஷன் எடுத்த முதல்வர்

அகர்தலாவில் திருமணத்தை நிறுத்திய கலெக்டர் மன்னிப்பு கேட்டுள்ளார்

Google Oneindia Tamil News

அகர்தலா: "இரவு நேர லாக்டவுன் இருக்கும்போது, ஊரையே கூட்டி எப்படி கல்யாணம் செய்வீங்க, இவங்களை அரெஸ்ட் பண்ணுங்க" என்று மாப்பிள்ளையையும், புரோகிதரையும் சட்டை காலரை பிடித்து இழுந்து வந்து போலீஸாரிடம் ஒப்படைத்த கலெக்டர் இப்போது ராஜினாமா செய்துள்ளார்.. இந்த சம்பவம் தொடர்பாக சர்ச்சை எழுந்ததால் தனது செயலுக்கு கலெக்டர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Lockdown-ல் கல்யாணம்..முதல்வன் அர்ஜூனாக மாறிய Tripura IAS Officer | Tripura Marriage Video

    திரிபுராவில் கடந்த 26-ம்தேதி ஒரு கல்யாணம் நடந்துள்ளது.. 2 கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து தடபுடலாக நடத்தி உள்ளனர்.. இந்த விஷயம், திரிபுரா மேற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் சைலேஷ்குமார் யாதவ்க்கு தெரிந்து, ராத்திரி 11 மணி அளவில், அந்த கல்யாண வீட்டுக்குள் நுழைந்தார்.

    தன்னுடன் போலீஸ் அதிகாரிகளையும் அவர் அழைத்து சென்றிருந்தார்.. குலாப் பாகன் மற்றும் மாணிக்யா கோர்ட் என்ற 2 கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்து, ஒவ்வொரு ரூமுக்குள்ளும் போலீசார் நுழைந்து, அங்கிருந்தவர்களை வெளியேற்றினர்..

    கொத்து கொத்தாக மனிதர்களை காவு வாங்கும் கொரோனா... உதவி முன்வந்த ஐ..நா- இந்தியா நிராகரிப்பால் சர்ச்சை கொத்து கொத்தாக மனிதர்களை காவு வாங்கும் கொரோனா... உதவி முன்வந்த ஐ..நா- இந்தியா நிராகரிப்பால் சர்ச்சை

    அனுமதி

    அனுமதி

    அப்போது, அந்த வீட்டு பெண் ஒருவர், நாங்கள் முறையான அனுமதியுடன் இந்த கல்யாணத்தை நடத்துகிறோம் என்று கலெக்டரிடம் அந்த அனுமதி பேப்பரை நீட்டினார்.. ஆனாலும், அதை கிழித்து போட்ட கலெக்டர், இரவு நேர லாக்டவுனில் அனுமதியை யார் தந்தது? என்று கேட்டு, கல்யாண மாப்பிள்ளையையும், புரோகிதரையும், இழுத்து கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.. மண்டபத்தில் உள்ள அனைவரையும் அரெஸ்ட் பண்ணுங்க என்றார்.

    கோரிக்கை

    கோரிக்கை

    144 தடை உத்தரவை மீறிவிட்டதால், இவ்வாறு கைது நடவடிக்கைக்கு உத்தரவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் கடந்த 2 நாட்களாக வைரலாகி சர்ச்சையாக வெடித்தது... இந்த செயல் இரு விதமான விமர்சனங்களை தாங்கி வந்தது.. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்..

     5 எம்எல்ஏக்கள்

    5 எம்எல்ஏக்கள்

    குறிப்பாக, 5 எம்எல்ஏக்களும் இதுதொடர்பாக முதல்வருக்கே லெட்டர் எழுதினார்கள்..இதையடுத்து, தனது செயலுக்கு கலெக்டர் வருத்தம் தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக 19 பெண்கள் உட்பட 31 பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமை செயலருக்கு முதல்வர் பிப்லப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    நடந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட கலெக்டர் சொல்லும்போது, "யாருடைய உணர்வையும் புண்படுத்தக்கூடாது என்பதே தனது நோக்கம்.. நான் செய்ததெல்லாம் இரவு ஊரடங்கு உத்தரவு காலத்தில் செய்யப்பட்டது.. இது மக்களின் நலனுக்காகவும் நல்வாழ்வுக்காகவும்தான்.. என் நடவடிக்கையால் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்" என்று யாதவ் தெரிவித்துள்ளார்.

    கலெக்டர்

    கலெக்டர்

    இதையடுத்து, கலெக்டரின் இந்த செயல் சரியானதுதான் என்று ஒரு தரப்பினரும், அவரது செயல் கடும் கண்டனத்துக்குரியது என்று இன்னொரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.. கலெக்டர் செய்தது சரிதான், நாடு கொரோனாவால் என்ன மாதிரியான நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த கல்யாண மண்டபத்தில் ஒருவருக்கு கொரோனா நோய் இருந்திருந்தால் என்ன ஆகும்? அதனால் இந்த நடவடிக்கை தேவை தான். இனி திருமணம் செய்ய நினைப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள் என்று ஒரு தரப்பினர் சொல்லி வருகின்றனர்.

    புரோகிதர்

    புரோகிதர்

    மற்றொரு தரப்பினரோ, "இவ்வளவு கடுமை காட்ட வேண்டிய அவசியமில்லை. இதேமாதிரி அரசியல் கட்சியினர் யாராவது கூட்டம் நடத்தினால் அவர்களிடமும் இப்படி நடவடிக்கை எடுப்பாரா? புரோகிதர்களை அடிக்கிறார்.. மணமகனை கழுத்தை பிடித்து தள்ளுகிறார். வயதானவர்கள் மீது போலீசார் லத்தி எடுத்து அடிக்கிறார்கள்? தகாத வார்த்தைகளை பேசுகிறார், பெண்ணின் முகத்தின் மீது பேப்பரை கிழித்து எறிகிறார். இது என்ன மாதிரியான நாகரிகம் என்று தெரியவில்லை. இங்கு யார் படித்தவர்கள்? கலெக்டர் போன்றா இவர் செயல்படுகிறார்... ஏதோ சினிமாவில் வரும் வில்லன் போல அடாவடி செய்கிறார்?" என்று இன்னொரு தரப்பினர் கண்டனம் சொல்லி வருகிறார்கள்.

    English summary
    Coronavirus: Tripura DM apologises for disrupting marriage ceremony
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X