For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதத்தின் தாய் வீடாக திகழ்கிறது பாகிஸ்தான்.. பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பாய்ச்சல் #brics

Google Oneindia Tamil News

பனாஜி, கோவா: இந்தியாவின் அண்டை நாடுதான் தீவிவராதத்தின் தாயாக திகழ்கிறது என்று இன்று கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தானை மறைமுகமாக சாடிப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரிக்ஸ் மாநாட்டுத் தலைவர்களுடன் இன்று நடந்த கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார் மோடி. தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்திப் பேசினார். நமது சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கு மிகப் பெரிய மிரட்டலாக திகழ்கிறது தீவிரவாதம். இந்தியாவின் அண்டை நாடு தீவிரவாதத்தின் தாயாக திகழ்வது மிகப் பெரிய துரதிர்ஷ்டம் ஆகும்.

பிரிக்ஸ் அமைப்பு வலுப்பட வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உலகளாவிய பொருளாதார சக்தியாக இது மாற வேண்டும். சர்வதேச அளவில் தீவிரவாதத்திற்கு எதிராக நாம் தீவிரம் காட்ட வேண்டும் என்றார் மோடி.

முன்னதாக ரஷ்ய அதிபர் புடின், இலங்கை அதிபர் சிறிசேனா உள்ளிட்டோரைத் தனித் தனியாக சந்தித்துப் பேசினார் மோடி. நேற்று ரஷ்யாவுடன் இந்தியா 16 ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
prime Minister Narendra Modi has blasted Pakistan for growing Terrorism in its territory and using them to tease India. While talking in the BRICS summit he said that, Country in India's neighbourhood is the mother-ship of terrorism. BRICS summit began yesterday at Goa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X