For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலாத்காரம் பற்றி சர்ச்சைக் கருத்து- முலாயம் சிங் நேரில் ஆஜராக மும்பை கோர்ட் உத்தரவு!

Google Oneindia Tamil News

மகோபா: பாலியல் பலாத்காரம் பற்றி சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் நேரில் ஆஜராக மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த மாதம் 19 ஆம் தேதி பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்வது சாத்தியமற்றது என்று சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார்.

mulayam

இது தொடர்பான வழக்கில் முலாயம் நேரில் ஆஜராக குல்பகார் சிவில் கோர்ட் நீதிபதி அங்கிட் கோயல் 21 ஆம் தேதி சம்மன் அனுப்பினார். அதற்கு அடுத்த நாளே மகோபா மாவட்ட கோர்ட்டில் இதற்கு தடை உத்தரவை முலாயம் பெற்றார்.

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் இளைஞரணி மாவட்ட தலைவர் பாகீரத் யாதவ், நீதிபதி கோயலின் வீட்டு உரிமையாளர் சுனில் அகர்வாலிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது கோயலை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நிர்பந்தித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுனில் அகர்வால் இது குறித்து குல்பகார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட்டை அவமதித்தாக முலாயம் சிங் யாதவ், பாகீரத் யாதவ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் பலாத்கார பேச்சு தொடர்பான வழக்கில் அக்டோபர் 1 ஆம் தேதி முலாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கோயல் உத்தரவிட்டார்.

English summary
Taking suo motu cognizance of media reports regarding alleged gangrape remarks by Mulayam Singh Yadav, a local court in Uttar Pradesh's Mahoba district on Friday issued summons to the Samajwadi Party (SP) chief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X