கொரோனாவால் தலைகீழாக மாறிய வாழ்க்கை.. வாட்ஸ் அப்பில் கதறி அழுதபடி பள்ளி உரிமையாளர்கள் தற்கொலை
விஜயவாடா: கொரோனா ஊரடங்கு காரணமாக ஆந்திராவில் ரூ.2 கோடி கடன் பிரச்னையில் சிக்கிய பள்ளி நிர்வாக தம்பதி, வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் கர்னூல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம், கர்னூலை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி ரோகிணி. இவர்கள் தாங்கள் வசிக்கும் கோலிகுண்டலா நகரில் 'லைப் எனர்ஜீ' என்ற பெயரில் ஆங்கில வழி பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தார்கள்.
கொரோனா பிரச்சனை வரும் வரை எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. பள்ளிக்கூடத்தில் அதிக மாணவர்கள் படித்து வந்தனர். இதனால், சுப்பிரமணியம் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். பள்ளி சிறப்பாக போனதால் கடந்தாண்டு ஜனவரியில் பள்ளியை விரிவுப்படுத்த, சிலரிடம் ரூ.2 கோடி வரை கடன் வாங்கி இருக்கிறார்கள்.

கல்வி கட்டணம்
கட்டிட பணிகள் நடந்து வந்தது . ஆனால் கடந்தாண்டு மார்ச்சில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பள்ளிகள் மூடப்பட்டது. ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டது. தொடக்கத்தில் பெற்றோர்கள் ஓரளவு கல்விக் கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் அதுவும் பின்னர் கிடைக்கவில்லை.

கட்ட முடியவில்லை
இதனால், வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாமல் சுப்பிரமணியம்-ரோகிணி தம்பதி அவதிப்பட்டுள்ளனர். கடன் கொடுத்தவர்கள் தினமும் கடனை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. வேதனை அடைந்த தம்பதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

வீடியோ
கடந்த 16ம் தேதி இருவரும் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார்கள். பின்னர், காரில் அமர்ந்தபடி இருவரும் வீடியோ பதிவு செய்தனர். அதில், கதறி அழுதபடி இருவரும், 'கடன் அதிகமாகிவிட்டது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் எங்களால் வாழ முடியவில்லை. இதனால், எங்களுக்கு தற்கொலை முடிவு தவிர வேறு வழியில்லை. அனைவரும் எங்களை மன்னித்து விடுங்கள்,' என பேசினார்கள்.

கர்னூல் சோகம்
இதை தங்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், காரில் விஷம் குடித்து மயங்கி கிடந்த சுப்பிரமணியம்-ரோகிணி தம்பதியை மீட்டு, கர்னூலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் கர்னூல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 6 டூ 12 வரை உடற்கல்வி வகுப்பு கட்டாயம்.. ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன அரசு -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
லஞ்ச் பாக்ஸில் மாட்டுக்கறி.. பள்ளிக்கு வந்த மாணவனையும் தாயையும் கைது செய்த போலீஸ்.. என்ன நடந்தது? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications