யெச்சூரிக்கு தமிழக, கேரளா தலைவர்கள் கடும் எதிர்ப்பு- 3-வது முறையாக ராஜ்யசபா எம்பி வாய்ப்பு மறுப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி ராஜ்யசபா தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட அக்கட்சியின் மத்திய குழு வாய்ப்பு தர மறுத்துள்ளது.

சீதாராம் யெச்சூரி ராஜ்யசபா எம்.பி.யாக மேற்கு வங்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு தரக் கோரி அம்மாநில குழு மத்திய குழுவுக்கு பரிந்துரைத்தது. இது தொடர்பாக டெல்லியில் மத்திய குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

CPM Central Committee rejects third term for Yechury in RS

கட்சி விதிகளின்படி எவருக்கும் 2 முறைக்கு மேல் வாய்ப்பு தரப்படவில்லை; ஆகையால் யெச்சூரிக்கும் தரக் கூடாது என தமிழகம், கேரளா, ஆந்திராவைச் சேர்ந்த மத்திய குழு உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

Oommen Chandy Teases CPM On JDU Issue | Oneindia Malayalam

இதனைத் தொடர்ந்து சீதாராம் யெச்சூரிக்கு 3-வது முறையாக போட்டியிட வாய்ப்பு தருவதில்லை என மத்திய குழு முடிவு செய்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Central Committee of the CPM voted against party chief Sitaram Yechury getting a third Rajya Sabha term.
Please Wait while comments are loading...