சட்டீஸ்கரில் கடும் துப்பாக்கிச் சண்டை... 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராய்பூர்: மாவோயிஸ்டுகளுடன் பாதுகாப்புப் படைவீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்களும் உயிரிழந்தனர். தண்டேவாடா மாவட்டம் தோடி தம்னர் என்ற இடத்தில் மாவோயிஸ்ட் முகாம் இருப்பது தொடர்பான தகவலை அறிந்த பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

CRPF men encountered 12 Maoists in Chhattisgarh

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் 8 முதல் 10 மாவோயிஸ்டுகள் காயமடைந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்ததாகவும் 5 பேர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த சண்டையில் மாவோயிஸ்டுகளிடம் இருந்து 5 கையெறிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fierce battle between CRPF and Maoists in Chhattisgarh, so far 12 Maoists shot dead.
Please Wait while comments are loading...