• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

சோனியா, ராகுல் ராஜினாமா படலம் சுபமாக முடிந்தது.. ஏற்க காங். காரியக் கமிட்டி மறுப்பு!

By Mathi

டெல்லி: டெல்லியில் இன்று கூடிய காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று விலக விரும்புவதாக தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கூற, உடனே அதை நிராகரித்து காரியக் கமிட்டி ஒரே குரலில் கூற, நல்லபடியாக கூட்டம் நடந்தேறி முடிந்தது.

CWC may resign en masse over poll debacle to shield Rahul

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. 206 இடங்களில் இருந்து 44 இடங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது.

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம் என அதிகாரம் வழங்கப்பட்டது. இதில் பலரும் ராகுல்காந்திக்கு நெருக்கமாக இருக்கும் சில முக்கிய தலைவர்களின் செயல்பாடுகள் பற்றி புகார் தெரிவித்தனர். ராகுல்காந்தியின் செயல்பாடுகள் பற்றியும் சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

If Sonia Gandhi knew that Sonia Gandhi was going to reject Sonia Gandhi's resignation, Sonia Gandhi would have cancelled the #CWC meeting.
— Be'Havin! (@bhavinjadav) May 19, 2014

அதே நேரத்தில் தோல்விக்கான காரணத்தை ஆராய்வதற்காக ஒரு குழு அமைப்பது, அதன்பின்னர் அதனை மறந்துவிடுவது என்ற வழக்கமான நடவடிக்கைகள் இந்த முறை தொடரக்கூடாது என்றும் சில தலைவர்கள் கூறியுள்ளனர். பொறுப்பானவர்கள் யார் என்பதை தெளிவாக இறுதி செய்ய வேண்டும். அவர்கள் மீது அவர் தனிநபராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் கட்சி பதவிகளை ராஜினாமா செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இருவரும் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தனர். ஆனால் எடுத்த எடுப்பிலேயே அதை காரியக் கமிட்டி நிராகரித்து விட்டது.

Sonia gandhi gave her resignation to Sonia gandhi which was rejected by Sonia gandhi because Sonia gandhi said resignation is not a solution
— Ankit jain (@indiantweeter) May 19, 2014

லோக்சபா கட்சித் தலைவராக கமல்நாத்

இதனிடையே லோக்சபாவில் தாம் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கிறேன் என்று கமல்நாத் கூறியுள்ளார். 9 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்நாத்தான் தற்போதைய நிலையில் லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியில் சீனியர். அவர் நீண்டகால அரசியல்வாதியான கமல்நாத் தமக்கு இந்த பதவி தாருங்கள் எனக் கேட்டிருப்பது குறித்தும் காரியக் கமிட்டி விவாதித்தது.

அதேபோல் ராஜ்யசபாவில் பிரதமர் மன்மோகன்சிங்குக்குப் பதிலாக காங்கிரஸ் கட்சித் தலைவராக ஏ.கே. அந்தோணியை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ராகுலுக்கு ஆதரவாக தொண்டர்கள் வெளியே முழக்கமிட சிறிது நேரம் பரபரப்பும் நிலவியது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
The Congress Working Committee may resign en masse over the humiliating defeat the party suffered in the Lok Sabha elections, sources said on Monday. The sources added that the CWC members will endorse their president Sonia Gandhi's line of taking collective responsibility in a bid to shield their vice president Rahul Gandhi who led the party campaign for the elections.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more