காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய ஜாவத் புயல் - ஒடிசா, மேற்கு வங்காளத்தில் காற்றுடன் கனமழை
வங்கக் கடலில் உருவான ஜாவத் புயல் நேற்று மாலை வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்கியது.
புவனேஸ்வர்: வலுவிழந்த ஜாவத் புயல், தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி ஒடிசா கடலோர பகுதிகளை கடந்து இன்று நள்ளிரவில் மேற்கு வங்காள கடற்கரையை நெருங்கும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. ஜாவத் புயல் வலுவிழந்தாலும் ஓடிசா, மேற்கு வங்காளத்தில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.
வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்து பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் சென்னை அருகே கரையை கடந்த நிலையில் இந்த பருவமழை காலத்தில் உருவான முதல் புயலுக்கு புயலுக்கு ஜவாத் என்று பெயர் சூட்டப்பட்டது. இது சவுதி அரேபியா வழங்கிய பெயராகும்.
ஜவாத் என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். ஜவாத் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்த புயல் காரணமாக டிசம்பர் 5ஆம் தேதி மேற்கு வங்காளத்திலும், அசாம், மேகாலயா, அருணாசல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

இந்த நிலையில் ஜாவத் புயல் நேற்று மாலை வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இன்று மாலை வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூரி கடற்கரை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் ஹூக்ளி ஆற்றில் படகு சேவைகள் நிறுத்தப்பட்டன. கடலோர ஓய்வு விடுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சுற்றுலாப் பயணிகளுக்கு அரசு வலியுறுத்தி உள்ளது.
பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளிலும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications