For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழுகை.. அச்சம்.. ஒரே நேரத்தில் 50 பேருக்கு மாரடைப்பு.. கதறிய மக்கள்.. தென்கொரியாவில் நடந்த கொடூரம்!

Google Oneindia Tamil News

சியோல்: தென்கொரியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 149 பேர் பலியான சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே நேரத்தில் 50 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண்ணீர்.. அச்சம்.. ஓலம்.. இதுதான் ஹாலோவீன் விழாவிற்காக தென்கொரியா தலைநகர் சியோலில் இருக்கும் இட்டவோன் நகரில் கூடிய மக்கள் நேற்று வெளிப்படுத்திய உணர்ச்சிகள். இங்கு வருடா வருடம் ஹாலோவீன் நடப்பது வழக்கம்.

இந்த ஏரியா சியோலில் இருக்கும் மார்க்கெட் ஏரியா போன்றது ஆகும். அதாவது சென்னை பாண்டி பாஜர் போன்ற ஏரியா ஆகும்.

குலுங்கிய தென் கொரியா.. ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி.. உடல் நசுங்கி 149 பேர் பலி.. கொடூரம்!குலுங்கிய தென் கொரியா.. ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி.. உடல் நசுங்கி 149 பேர் பலி.. கொடூரம்!

 கூட்டம்

கூட்டம்

கொரோனாவிற்கு பின் மிகப்பெரிய அளவில் இங்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஹாலோவீன் காரணமாக இந்த பகுதியே திருவிழா கோலம் பூண்டு இருந்தது. இதில் இரவு விழாவில் கலந்து கொள்வதற்காக 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்து இருந்தனர். ஒரே நேரத்தில் மிக சிறிய ஏரியாவில் இத்தனை பேர் கூடியதால் கூட்ட நெரிசலில் மக்கள் முண்டியடிக்க தொடங்கினார்கள். ஒருவரை ஒருவர் இங்கும் அங்கு தள்ள தொடங்கினார்கள்.

 மோசமான நிலை

மோசமான நிலை

இவர்கள் எல்லோரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து சிக்கி.. நெரிசலில் மாற்றிக்கொண்டனர். மனிதர்களை மலை போல ஒருவர் மீது ஒருவர் அடுக்கி வைத்தால் எப்படி இருக்கும். அது போல இவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து.. வலை போல சிக்கிக்கொண்டனர். எந்த அளவிற்கு சிக்கி இருந்தனர் என்றால், நேற்று இரவு இவர்களை மீட்க போலீசார், தீயணைப்பு படையினர் வந்த போதும் கூட இவர்களை மீட்க முடியவில்லை. அந்த அளவிற்கு வலை பின்னல் போல இவர்கள் நெரிசலில் சிக்கி இருந்தனர்.

நெரிசல்

நெரிசல்

கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க ஒரு சிலர் ஓட முயன்ற போது இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் அடியில் சிக்கிய பலருக்கு அங்கேயே மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு அழுத்தம் காரணமாக அங்கேயே இவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இவர்களின் உடலை வெளியே எடுத்து நடு ரோட்டில் வைத்து மக்களும், தீயணைப்பு படையினரும் அவசர உதவி செய்தனர். இவர்களுக்கு சிபிஆர் செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 எத்தனை பேர்

எத்தனை பேர்

மொத்தம் 50 பேருக்கு இப்படி மாரடைப்பு மட்டும் ஏற்பட்டு உள்ளது. இவர்களின் உடல்களை சாலையில் வரிசையாக படுக்க வைத்து மக்கள் சிபிஆர் செய்த காட்சிகள் இணையத்தை உலுக்கி உள்ளன. இந்த சம்பவத்தில் இதுவரை 149 பேர் பலியாகி உள்ளனர். நேற்று இரவு வரை பலி எண்ணிக்கை 100 ஆக இருந்தது. அதிகாலையில் பலி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.

பலி

பலி

தற்போதைய நேரப்படி பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது. அங்கே இன்னும் பலர் நெரிசலில் சிக்கி உள்ளனர். 150க்கும் அதிகமானோர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நேரம் செல்ல செல்ல பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலோவீன் விழாவில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது.

English summary
Deadly scenes from Seoul South Korea Stampede during Halloween.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X